நயன்தாரா போல இது என்ன வித்தியாசமான ஆசை கீர்த்தி சுரேஷுக்கு..ரெடியாகிவிட்டாரா?
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய அளவில் சிறப்பான நடிகையாக உள்ளார். அவரது அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து ரிலீசாகி வருகின்றன.
சமீபத்தில் தமிழில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் சாணிக் காயிதம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதேபோல தெலுங்கில் சர்க்காரு வாரிப்பட்டா மற்றும் மலையாளத்தில் வாஷி போன்ற படங்களும் அவரது நடிப்பில் வெளியாகின.

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்களில் ரிலீசாகி வருகின்றன. விஜய், சூர்யா, மகேஷ்பாபு என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் கீர்த்தி நடித்து முடித்துள்ளார். மலையாளத்திலும் தனது சொந்த தயாரிப்பில் வாஷி படத்தை வெளியிட்டுள்ளார்.

சாணிக் காயிதம் படம்
தமிழில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி நடித்திருந்த சாணிக் காயிதம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஆதிக்க வர்க்கத்தின் பிடியில் சிக்கி தன்னுடைய குடும்பம் சின்னாபின்னமானதை எதிர்த்து பழிவாங்கும் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

மகேஷ்பாபுவுடன் படம்
இதே சமயத்தில் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து இவர் நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பட்டா என்ற படமும் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூலில் சிறப்பாக அமைந்தது. படத்தில் கீர்த்தியின் நடிப்பும் நடன அசைவுகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி
சாவித்ரியின் பயோபிக்காக வெளியான மகா நடி படம் மூலம் தன்னை சிறப்பான நடிகையாக வெளிப்படுத்திய கீர்த்தி தமிழிலும் சிறப்பான நடிகையாக வலம் வருகிறார். இந்தப் படம் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றத் தந்துள்ளது.

உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் கீர்த்தி
இதனிடையே தமிழில் அடுத்ததாக உதயநிதியுடன் மாமன்னன் என்ற படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி. இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வித்தியாசமான போட்டோஷுட்கள்
தெலுங்கிலும் சர்க்காரு வாரிப்பட்டா படத்தை தொடர்ந்து 3 படங்களில் கமிட்டாகி நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தொடர்ந்து வித்தியாசமான காஸ்ட்யூம்களில் போட்டோஷுட்களை நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

நயன்தாரா போல காஸ்ட்யூம்
இந்தப் புகைப்படங்களில் ஒரு தீம் வைத்துக் கொண்டும் போட்டோஷுட்டை நடத்தி வருகிறார் கீர்த்தி. தற்போது நடிகை நயன்தாராவின் திருமண காஸ்ட்யூமை கான்செப்டாக கொண்டு புதிய போட்டோஷுட்டை நடத்தியுள்ளார் கீர்த்தி. நயன்தாராவை போலவே சிவப்பு நிற புடவையை உடுத்திக் கொண்டு கழுத்து நிறைய நகைகளுடன் இந்தப் புகைப்படங்களில் காட்சி அளிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்திக்கு திருமண ஆசை?
இதையடுத்து கீர்த்திக்கும் நயன்தாராவை போல திருமண ஆசை வந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிக்க வந்தபோது கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூறிவந்த கீர்த்தி தற்போது தன்னுடைய அழகை வெளிப்படுத்தும்வகையில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

உடலை தேற்றிய கீர்த்தி சுரேஷ்
ஆரம்பத்தில் குண்டாக கொழுகொழுவென்றிருந்த கீர்த்தி, உடம்பை குறைக்கிறேன் பேர்வழி என்று மிகவும் ஒல்லியாகி ஆளே அடையாளம் தெரியாதவகையில் மாறினார். இந்த மாற்றம் அவரது ரசிகர்களுக்கே பிடிக்காத நிலையில், தற்போது மீண்டும் உடலை தேற்றிக் கொண்டு அழகாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.


Click it and Unblock the Notifications











