வீரப்பெண்மணியாய் கையில் வாளுடன் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சாவாக உருமாறிய புகைப்படங்கள்!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்
இப்பொழுது இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் மலையாளத்தில் மரக்கார் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்
இன்று மரக்கார் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் அதில் ஆர்ச்சா என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

முதல் முறையாக தங்கை கதாபாத்திரத்தில்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அதேசமயம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுவரை ஹீரோயினாக வலம் வந்த இவர் முதல்முறையாக ரஜினிக்கு ஜோடியாக அண்ணாத்த படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

பழங்குடியின பெண்ணாக
மகாநடி,மிஸ் இந்தியா,பெண் குயின் ஆகிய படங்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்துள்ள திரைப்படம் குட்லக் சகி மிக விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகவும் படத்தில் நடித்திருப்பதால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில்
மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் மரக்கார் முன்னணி இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் சரித்திர பின்னணியில் உருவாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாராகி வந்த இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது.

கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சாவாக
நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ஆர்ச்சா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை என்னுடைய பாணியில் மிக சரியாக செய்து முடிக்கும் கீர்த்தி சுரேஷ் மரக்கார் படத்தில் ஆர்ச்சா என்ற கதாபாத்திரத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான ரோலில் நடித்துள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

வீரப்பெண்மணி போலவே கம்பீரமாக
இன்று வெளியான மரக்கார் திரைப்படம் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இப்படத்தில் ஆர்ச்சா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அதன் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். சிகப்பு நிற சேலையில் கையில் வாளுடன் மன்னர் காலத்து வீரப்பெண்மணி போலவே கம்பீரமாக உள்ள கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.


Click it and Unblock the Notifications











