கீர்த்தி சுரேஷின் அடுத்த ப்ராஜக்ட்... பாடல் பிரமோ வெளியீடு... அடுத்தடுத்த அப்டேட்!
ஐதராபாத் : நடிகை கீர்த்தி சுரேஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இவரது நடிப்பில் சமீபத்தில் குட் லக் சகி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் அவரது அடுத்த படமான காந்தாரி படத்தின் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்து குறைந்த காலத்திலேயே நல்ல நடிகை என்ற பெயரையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார். இவரது மகா நடி படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. இதையடுத்து தமிழில் விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் கீர்த்தி.

ரிலீசுக்கு தயாரான சாணிக் காயிதம்
தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது செல்வராகவனுடன் இணைந்து இவர் நடித்துள்ள சாணிக் காயிதம் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை ராக்கி படத்தை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். செல்வராகவன் நடிகராகவும் இணைந்துள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வித்தியாசமான கீர்த்தியை பார்க்க முடிகிறது.

குட் லக் சகி படம்
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான குட் லக் சகி படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்திருந்தார் கீர்த்தி. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனிடையே மகேஷ் பாபுவுடன் இவர் நடித்துள்ள சர்க்காரு வாரிப் பட்டாவும் விரைவில் ரிலீசாக உள்ளது.
Recommended Video

அடுத்தடுத்த படங்கள்
இதனிடையே தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள போலே சங்கர் படத்திலும் கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் டொவினோ தாமசுடன் இணைந்து வாஷி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார் கீர்த்தி. படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

காந்தாரி படத்தில் கீர்த்தி
இந்நிலையில், முன்னணி நடன இயக்குநர் பிருந்தா நடனம் மற்றும் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள காந்தாரி படத்தின் முதல் பாடல் இன்றைய தினம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடலுக்கான பிரமோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு பவன் சிஎச் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











