Don't Miss!
- News
எடப்பாடிக்கு அடி மேல் அடி.. அதிமுக அலுவலக சாவியும் கையை விட்டுப் போகுமா? - வந்த ‘நெகட்டிவ்’ சிக்னல்!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Finance
பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!
- Technology
கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
- Lifestyle
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
தொடர்ந்து பிளாப் படங்கள்.. கீர்த்திக்கு கைக் கொடுக்காத சொந்தப் படம்.. எப்பதாங்க ஹிட் கொடுப்பீங்க?
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மகா நடி என்ற சிறப்பான படத்தில் நடித்து பெயர் வாங்கிய கீர்த்தி, தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனாலும் இவரால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க முடியவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.
எடுத்தா
அவரோட
பயோபிக்
தான்
எடுப்பேன்..
என்ன
லோகேஷ்
கனகராஜ்
பிளான்
எல்லாம்
பிரம்மாண்டமா
இருக்கு!

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்ப கட்டத்திலேயே சிறப்பான பல படங்களை தேர்வு செய்து நடித்தவர். நடிகை சாவித்ரியின் பயோ பிக்கில் நடித்து தன்னை சிறப்பான நடிகையாக வெளிப்படுத்தினார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு அவரை சாவித்ரியாகவே பார்க்க வைத்தது. நல்ல விமர்சனங்களும் கிடைத்தது.

கமர்ஷியல் படங்களில் கவனம்
தொடர்ந்து இவருக்கு பயோ பிக்கில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை மறுத்து கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தினார். ஒரே மாதிரி கேரக்டர்களில் நடிப்பது தன்னுடைய கேரியருக்கு சிறப்பாக அமையாது என்று இதற்கு விளக்கமும் கொடுத்தார். அந்த அளவிற்கு தெளிவான முடிவை எடுத்து நடித்து வந்தார்.

அண்ணாத்த படம்
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சூர்யா, விஜய் உள்ளிட்டவர்களுடன் தமிழில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரியில் இவர் ரஜினியுடன் நடித்த அண்ணாத்த படம் ரிலீசானது. படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி.

கைக்கொடுக்காத சர்க்காரு வாரி பட்டா
இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே இவருக்கு பெற்றுத் தந்தது. மிகையான நடிப்பை இவர் வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் இவர் நடித்திருந்த சர்க்காரு வாரி பட்டா படமும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை.

சாணிக் காயிதம் படம்
படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தததாக ரசிகர்கள் கொண்டாடினர். ஆனாலும் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தொடர்ந்து தமிழில் ஓடிடியில் வெளியான சாணிக் காயிதம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. இவரது நடிப்பிற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன.

சொந்த தயாரிப்பு வாஷி படம்
இந்நிலையில் மலையாளத்தில் இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான வாஷி படமும் இவருக்கு கைக்கொடுக்கவில்லை. இந்தப் படத்தில் மலையாள நடிகர் டொமினோ தாமசுடன் இணைந்து நடித்திருந்தார் கீர்த்தி. தொடர்ந்து டொமினோவின் படங்கள் ப்ளாப் ஆகி வரும் சூழலில் இந்தப் படமும் ஹிட்டடிக்கவில்லை.

வெற்றிப் படத்திற்கு அவசியம்
இந்நிலையில் மகாநடி போன்ற சிறப்பான ஒரு படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் கீர்த்தி சுரேஷிற்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய படத்தை இவர் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதே இவரது ரசிகர்களின் விருப்பமாகவும் காணப்படுகிறது. தற்போது உதயநிதி நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் படத்தில் கீர்த்தி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.