விக்ரமுக்கு நோ... பவன் கல்யாணுக்கு யெஸ்... ஏன் சொன்னார் கீர்த்தி சுரேஷ்?
தமிழில் நயன் தாரா சமீபகாலமாக ஜோடியாக நடிப்பதை கைவிட்டு லீட் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதால் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்புகள் கீர்த்தி சுரேஷின் கதவைத் தட்டுகின்றன.

முன்னணி ஹீரோக்களே தன்னை ஜோடியாக்க கேட்டாலும் ஹீரோக்களை பார்த்து பார்த்து தான் செலக்ட் செய்கிறார் கீர்த்தி. அப்படி இங்கே விக்ரமுடன் நடிக்க வந்த வாய்ப்பை அவரது வயதைக் காரணம் காட்டி முடியாது என மறுத்து விட்டார். ஆனால் தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பவன் கல்யாணுக்கு நாற்பது வயதைத் தாண்டி ஆகிறது.
விசாரித்தால் தெலுங்கு பக்கம் மட்டும் எந்த வாய்ப்பு வந்தாலும் விடக்கூடாது என்பது அம்மாவின் உத்தரவாம். காரணம், வேறென்ன... அதிகமான சம்பளம்தான்!
Comments


Click it and Unblock the Notifications