பொன்னி கேரக்டரை ரிலாக்ஸ்டாக நடித்தேன்... இந்தக் கேரக்டருக்கு மகாநடி படம்தான் உதவி செஞ்சுது

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் வெளியாகியுள்ளது சாணிக் காயிதம். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இருவருமே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகவுள்ளது. தற்போது அவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள சாணிக் காயிதம் படம் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

பாராட்டை பெற்ற கீர்த்தி

பாராட்டை பெற்ற கீர்த்தி

ஆயினும் முதல் படமாக இருந்தாலும் செல்வராகவனும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார். இதேபோல கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அவரது நடிப்பு படத்தின் பல இடங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியாக உள்ளது. அவரது நடிப்பு மெருகேறியுள்ளதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பொன்னி கேரக்டர்

பொன்னி கேரக்டர்

படத்தில் பொன்னி என்ற கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஆரம்பம் முதலே படத்தின் கேரக்டரில் அவரால் பொருந்தி சிறப்பாக நடிக்க முடிந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் மிகவும் சிறப்பான ஆதங்கம், கோபம் போன்றவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

கைகொடுத்த மகாநடி படம்

கைகொடுத்த மகாநடி படம்

குறிப்பாக பழிவாங்க வேண்டும் என்று அவர் கூறும் இடத்தில் வில்லன்களை எப்படி கொல்ல வேண்டும் என்று குறிப்பிடும் காட்சியில் அவரது நடிப்பு பாராட்டிற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க தனக்கு மகாநடி படம் சிறப்பாக கைக்கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரஷர் எடுத்துக் கொள்ளவில்லை

பிரஷர் எடுத்துக் கொள்ளவில்லை

இதுகுறித்த பேட்டியில், மகாநடி படத்தில் நடிக்கும்போது தான் அதிகமான பிரஷரை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால் அதுபோலல்லாமல் இந்தப் படத்தில் நடிக்க தான் எந்த பிரஷரையும் மண்டையில் போட்டுக் கொள்ளவில்லை என்றும் ரிலாக்சாக நடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பொன்னி கதாபாத்திரம்

பொன்னி கதாபாத்திரம்

தினமும் சூட்டிங் முடிந்து வந்து, காமெடி காட்சிகளை பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அருண் மாதேஸ்வரன் அனுப்பிய சில வீடியோ காட்சிகளை மட்டும் தன்னுடைய மனதில் ஏற்றிக் கொண்டு பொன்னியின் கதாபாத்திரத்தை தான் டெவலப் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் அனுபவசாலி

அருண் மாதேஸ்வரன் அனுபவசாலி

அருண் மாதேஸ்வரன் மிகவும் அனுபவசாலி என்றும் இயக்கம் குறித்த தெளிவு அவரிடம் காணப்பட்டதாகவும் அவரிடம் தான் அதிகமாக கற்றுக் கொண்டதாகவும் கீர்த்தி தெரிவித்துள்ளார். இதேபோல செல்வராகவன் இயக்கத்தில் தான் பணியாற்றவில்லை என்றாலும் நடிகராக அவருடன் இணைந்து நடித்தது சிறப்பான அனுபவம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X