'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு!
நடிகை கீர்த்தி சுரேஷ் இரண்டு மாதம் ஓய்வில் செல்ல முடிவெடுத்துள்ளார்.
சென்னை: தொடர்ந்து நடித்ததன் காரணமாக ஏற்பட்ட களைப்பினால் இரண்டு மாதம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இது என்ன மாயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஷாலின் ஜோடியாக இவர் நடித்த சண்டகோழி 2 வரும் வாரம் ரிலீசாக இருக்கிறது.

தீபாவளிக்கு விஜய் ஜோடியாக இவர் நடித்துள்ள சர்கார் படம் ரிலீசாக இருக்கிறது. இது தவிர மலையாளப் படம் ஒன்றிலும் அவர் நடித்துள்ளார். இந்த படங்களை தவிர வேறு எந்த படங்களையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
இதற்கு காரணம் அவர் இரண்டு மாத காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளது தான். ஓய்விற்காக வெளிநாடு எல்லாம் பறக்க போவதில்லையாம் அவர்.
வீட்டிலேயே தோட்ட வேலைகள் செய்து, நன்றாக தூங்கி ஓய்வெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக படங்களில் நடித்ததால், சரியாக உறங்கக் கூட நேரமில்லாமல் கீர்த்தி அவதிப்பட்டாராம். அதனால் தான் இந்த திடீர் ஓய்வு என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











