சொந்த பேனரில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்... ஹீரோயினாக முதல் படம்
திருவனந்தபுரம் : நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது சிறப்பான நடிப்பில் சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படம் ரிலீசாகி சக்கை போடு போட்டு வருகிறது.
இவரது தந்தை ஒரு தயாரிப்பாளர் என்றாலும் இதுவரை அவரது தயாரிப்பில் இவர் ஹீரோயினாக நடிக்கவில்லை. முதல் முறையாக தற்போது நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இவரது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை படமான மகா நடிகையில் இவரின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

முன்னணி ஹீரோக்களின் நாயகி
இவருக்கு சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுத் தந்துள்ளது. இதையடுத்து இவரது காட்டில் மழைதான். தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தெலுங்கில் மகேஷ் பாபு உள்ளிட்டவர்களுடனும் மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்டவர்களுடனும் நடித்து முடித்துள்ளார்.

மீண்டும் விஜய்க்கு ஜோடி?
தொடர்ந்து அடுத்ததாக தமிழில் மீண்டும் விஜய்யுடன் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் சூப்பர்ஸ்டாருடன் நடித்து தீபாவளிக்கு ரிலீசாகியுள்ள அண்ணாத்த படம் இவருக்கு சிறந்த விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. படத்தில் ரஜினியின் தங்கையாக சிறப்பான நடிப்பை தந்துள்ளார் கீர்த்தி.
Recommended Video

அண்ணாத்த படம்
இவருக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்கு சிறப்பான ஸ்கோப் காணப்பட்டது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ரஜினி -கீர்த்தி வரும் காட்சிகளில் குறிப்பாக பாடல் காட்சிகளில் சென்டிமெண்ட் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. ஏராளமான ரசிகர்கள் தங்களது சொந்த வாழ்க்கையை நினைத்து உருகிய தருணங்களை இந்தப் படம் கொடுத்துள்ளது.

சொந்த பேனர்
கீர்த்தியின் தந்தை சுரேஷ் பிரபல மலையாள தயாரிப்பாளர். இவரது தாய் நடிகை மேனகா. இவர் ரஜினியுடன் நாயகியாக நடித்தவர். கீர்த்தி தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் குழந்தை நட்சத்திரமாக 3 படங்களில் நடித்துள்ளார். ஆனால் நாயகியான பிறகு அவரது தயாரிப்பில் நடித்திருக்கவில்லை.

வாஷி படத்தில் நடிப்பு
இந்நிலையில் வாஷி என்ற படத்திற்காக தன்னுடைய சொந்த பேனரில் தற்போது நடித்து வருகிறார் கீர்த்தி. இந்தப் படத்தின் தயாரிப்பை இவரது அக்கா ரேவதி மேற்கொண்டு வருகிறார். படத்தின் ஹீரோவாக டொவினோ தாமஸ் நடிக்கவுள்ளார். பிரபல சினிமா போட்டோகிராபர் கோபாலகிருஷ்ணனின் மகன் விஷ்ணு இந்தப் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் படப்பிடிப்பு வரும் 17ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











