குருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்!
சென்னை : கீர்த்தி சுரேஷ் நித்தின் இணைந்து நடித்திருந்த ரங் தே திரைப்படம் கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதுவரை தரமான மற்றும் தனித்துவமான படங்களை கொடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் செல்வராகவன் முதன் முறையாக நடிகராக அறிமுகமாகும் படத்தில் வித்தியாசமான ரோலில் கீர்த்தி நடிக்கிறார்.
ஏற்கெனவே கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் என்ற செய்திகள் பல்வேறு விதமாக வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் இப்போது குடும்பத்தாருடன் குருவாயூர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சூப்பர் குயின்
தென்னிந்தியாவின் சூப்பர் குயின் என அனைவராலும் கொண்டாடப்பட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் தற்போதைக்கு அண்ணாத்த, சாணி காகிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் குரானா பரவல் ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு இன்றுவரை தொடங்காமல் உள்ளது.

ரங் தே
காதல் காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக உருவான ரங் தே படத்தில் நித்தின் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படம் கடந்த மார்ச் 26ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்படும் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் செய்த சிறு சிறு சேட்டைகளை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தந்தை சுரேஷ் விளக்கம்
முன்னணி நடிகையாக இருக்கும்போதே பலர் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்ற வதந்தி கடந்த சில காலமாகவே தொடர்ந்து பரப்பி வர அதற்கான விளக்கங்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது தந்தை சுரேஷ் அளித்து வந்தாலும் இன்று வரை ஓயாமல் திருமணம் பற்றிய பேச்சுக்கள் திரை வட்டாரத்தில் அடிபட்டு கொண்டே உள்ளது.

பட்டு பாவாடை தாவணியில்
கேரளாவில் உள்ள பிரசதி பெற்ற வழிபாட்டுத் தளங்களில் ஒன்றான குருவாயூர் கோவில் உலக அளவில் பிரபலமான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குருவாயூர் கோவிலுக்கு கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது பெற்றோர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இப்பொழுது பகிர்ந்துள்ளார். அதில் கீர்த்தி சுரேஷ் கேரளா ஸ்டைலில் பட்டு பாவாடை தாவணியில் சும்மா நச்சுன்னு வெட்கப்பட்டுக் கொண்டே நிற்க பார்க்கும் அனைவரையும் சில்லு சில்லாக்குகிறது.


Click it and Unblock the Notifications