அசோக் செல்வன் இப்படிப்பட்டவர்தான்.. மனம் திறந்து பேசிய கீர்த்தி பாண்டியன்..செம லவ்
சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவிலிருந்து நடித்துவரும் அவர் கடைசியாக கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்திருந்தார். கடந்த வருடம் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்டார். ப்ளூ ஸ்டார் படத்தில் இணைந்து நடித்தபோது இரண்டு பேருக்குமிடையே ஏற்பட்ட பழக்கம் திருமணத்தில் முடிந்தது. இந்தச் சூழலில் அசோக் செல்வன் குறித்து மனம் திறந்து ஒரு பேட்டியில் பேசினார் கீர்த்தி பாண்டியன்.
தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த நடிகராக திகழ்ந்தவர் அருண் பாண்டியன். ஆக்ஷன் ஹீரோவாக அறியப்பட்ட அவருக்கு கீர்த்தி பாண்டியன் என்ற மகள் இருக்கிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படமானது கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓரளவு நல்ல பெயரே கிடைத்தது.

அடுத்தடுத்த படங்கள்: தும்பா படத்துக்கு பிறகு அன்பிற்கினியாள் படத்தில் நடித்தார். அதில் அருண் பாண்டியனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான கண்ணகி படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸையே ரசிகர்கள் கொடுத்தனர்.குறிப்பாக கீர்த்தி பாண்டியனின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களது பாராட்டை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளூ ஸ்டார் டூ திருமணம்: அடுத்ததாக அவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. பா.இரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்துக்கு சூப்பர் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடித்தபோதுதான் அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரின் காதலுக்கும் வீட்டாரின் சம்மதம் கிடைக்க கடந்த வருடம் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திலிருந்து கீர்த்தி மேற்கொண்டு அடையாளப்பட்டார்.
உருவ கேலி: முக்கியமாக கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்டதால் அவரது உருவத்தை வைத்து கேலி செய்தனர். ஆனால் அப்படி செய்தவர்களுக்கு அசோக் தரமான பதிலடியை கொடுத்தார். அதுமட்டுமின்றி எல்லோரையும் வம்பிழுக்கும் பயில்வான் ரங்கநாதனை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எங்கள் வீட்டில் சண்டை என்று நீங்கள் வந்து பார்த்தீர்களா என கேள்வி கேட்டு சம்பவம் செய்தார் கீர்த்தி.
மேலும் அசோக் செல்வனிடம், திருமணத்துக்கு பிறகு கீர்த்தி பாண்டியன் நடிப்பாரா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அசோக், நான் ஒன்றும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓனர் கிடையாது என்று சாட்டையடி பதில் கொடுத்தார்.கீர்த்தி மற்றும் அசோக்கின் செயல்களையும், பதில்களையும் நெட்டிசன்கள் இணையத்தில் கொண்டாடினர்.மேலும் சிறந்த ஜோடியாக இவர்கள் வலம் வருவார்கள் என்றும் கூற ஆரம்பித்தனர்.
கீர்த்தியின் பேட்டி: இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கீர்த்தி பாண்டியன் அளித்த பேட்டியில், "அசோக் செல்வனுக்கு இயற்கையாகவே இரக்க குணம். அவருக்கு உண்மையில் தங்கமான மனது. நூறு சதவீதம் உண்மை. பல நேரத்தில் அதனை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு அழகான ஆன்மா. அவர் ரொம்பவே உறுதியான மனிதர். அது வாழ்க்கையோ தொழிலோ எதுவாக இருந்தாலும் உறுதியாக இருப்பார். உண்மையாக இருப்பார்.
நிறைய மெனக்கெடல்: அதேபோல் அசோக்கிடம் நிறைய மெனக்கெடல் இருக்கும். இந்த பத்து வருடங்களில் நிறைய விஷயங்களுக்காக அவர் மெனகெட்டிருக்கிறார். இப்போது வீட்டில் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் வீட்டில் சமைப்பது, சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது என அனைத்து விஷயங்களையும் பிரித்துக்கொண்டுதான் செய்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











