பற்றி எரிந்த கார்.. உயிருக்கு ஏதாவது ஆகிருந்தா என்ன செய்வது?.. கொந்தளித்த கீர்த்தி பாண்டியன்

சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்துவரும் அவர் கடைசியாக கண்ணகி படத்தில் நடித்திருந்தார். இந்த சூழலில் அவர் போட்டிருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. மேலும் கீர்த்தி பாண்டியனுக்கு ரசிகர்களும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த நடிகராக திகழ்ந்தவர் அருண் பாண்டியன். ஆக்‌ஷன் ஹீரோவாக அறியப்பட்ட அவருக்கு கீர்த்தி பாண்டியன் என்ற மகள் இருக்கிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படமானது கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓரளவு நல்ல பெயரே கிடைத்தது.

Keerthy Pandians tweet trending in support of her neighbor after her car caught fire

அடுத்தடுத்த படங்கள்: தும்பா படத்துக்கு பிறகு அன்பிற்கினியாள் படத்தில் நடித்தார். அதில் அருண் பாண்டியனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கண்ணகி படம் வெளியானது. படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸையே ரசிகர்கள் கொடுத்தனர்.குறிப்பாக கீர்த்தி பாண்டியனின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களது பாராட்டை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ ஸ்டார் டூ திருமணம்: அடுத்ததாக அவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகிறது. பா.இரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் நடித்தபோதுதான் அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரின் காதலுக்கும் வீட்டாரின் சம்மதம் கிடைக்க அண்மையில்தான் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திலிருந்து கீர்த்தி மேற்கொண்டு அடையாளப்பட்டார்.

உருவ கேலி: முக்கியமாக கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்டதால் அவரது உருவத்தை வைத்து கேலி செய்தனர். ஆனால் அப்படி செய்தவர்களுக்கு அசோக் தரமான பதிலடியை கொடுத்தார். அதுமட்டுமின்றி எல்லோரையும் வம்பிழுக்கும் பயில்வான் ரங்கநாதனை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எங்கள் வீட்டில் சண்டை என்று நீங்கள் வந்து பார்த்தீர்களா என கேள்வி கேட்டு சம்பவம் செய்தார் கீர்த்தி.

மேலும் சில நாட்களுக்கு முன்புகூட அசோக் செல்வனிடம், திருமணத்துக்கு பிறகு கீர்த்தி பாண்டியன் நடிப்பாரா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அசோக், நான் ஒன்றும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓனர் கிடையாது என்று சாட்டையடி பதில் கொடுத்தார்.கீர்த்தி மற்றும் அசோக்கின் செயல்களையும், பதில்களையும் நெட்டிசன்கள் இணையத்தில் கொண்டாடிவருகின்றனர்.மேலும் சிறந்த ஜோடியாக இவர்கள் வலம் வருவார்கள் என்றும் கூறுகின்றனர்.

பற்றி எரிந்த கார்: இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் போட்டிருக்கும் ட்வீட் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சரவணக்குமார் என்பவரின் எல்க்ட்ரானிக் கார் பற்றி எரிந்திருக்கிறது. அதுகுறித்து சரவணக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் MG ZS EV என்ற எலக்ட்ரானிக் காரை கடந்த ஆறு வாரங்களுக்கு முன்பு 26 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். இதனை என் வீட்டின் முன்பு இருக்கும் பார்க்கிங்கில் நிறுத்தியிருந்தேன்.

அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த என் அக்கம்பக்கத்தினரும், என் குடும்பத்தினரும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்கள். அதனடிப்படையில் 30 நிமிடங்களில் வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து கார் நிறுவனத்துக்கு நான் தகவல் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.

கொந்தளித்து எழுந்த கண்ணகி: இதனையடுத்து கீர்த்தி பாண்டியன் சரவணக்குமாரின் ட்வீட்டை ரீ ட்வீட் செய்து, "இது என்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் சரவணக்குமார் என்பவருடைய கார். அவரது வீட்டில் குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை இருக்கிறார்கள். இந்த விபத்தின்போது யாரேனும் பக்கத்தில் இருந்திருந்தால் என்ன ஆவது?.. இது ரொம்பவே ஆபத்தான் ஒன்று. எனவே அவரது மின் அஞ்சலுக்கு பதில் சொல்லுங்கள். பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்" என எம்ஜி நிறுவனத்திடம் சொல்லியிருக்கிறார். அவரது இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், பக்கத்தில் ஏதேனும் பிரச்னை நடக்கும்போது பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நிற்கும் கீர்த்தி பாண்டியனுக்கு தங்கமான மனசு என ரசிகரக்ள் கமென்ட் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X