என்னோட சப்போர்ட் சிஸ்டம்... உருகிய கீர்த்தி சாந்தனு!

சென்னை : நடிகர் சாந்தனு சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் படம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் அவரது மனைவி கீர்த்தி சாந்தனு, அவர் குறித்து உருக்கத்துடன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சாந்தனு பாக்யராஜ்

நடிகர் சாந்தனு பாக்யராஜ்

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நீண்ட காலங்களாக கோலிவுட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடி வருகிறார். பாக்யராஜின் மகன் என்ற சிறப்பான பின்புலம் இருந்தாலும் அவரது போராட்டம் நீண்ட காலங்களாக இருந்து வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது.

மாஸ்டர் படத்தில் சாந்தனு

மாஸ்டர் படத்தில் சாந்தனு

படத்தில் சிறிய கேரக்டரில் அவர் நடித்திருந்தாலும் சிறப்பான விமர்சனங்களை அவர் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படம் இம்மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாகியுள்ளார் அதுல்யா ரவி.

Recommended Video

தடுப்பூசி கண்டிப்பா போடுங்க | Actress Keerthy Suresh Awareness Video | Vaccine
முருங்கைக்காய் சிப்ஸ் படம்

முருங்கைக்காய் சிப்ஸ் படம்

படத்தினை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் ஸ்ரீஜார். லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தரன்குமார் இசையில் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக டாக்கு லெஸ்ஸு வொர்க்கு மோரு பாடல் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

சாந்தனு மனைவி கீர்த்தி

சாந்தனு மனைவி கீர்த்தி

சாந்தனுவின் மனைவி கீர்த்தி, சிறந்த தொகுப்பாளராக உள்ளார். இவர் விஜய் டிவியின் ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். கிகி விஜய் என்ற நிக் பெயருடன் ட்விட்டரில் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். சாந்தனு மற்றும் கிகி ஜோடி கோலிவுட்டில் மிகவும் பிரபலமாக காணப்படுகிறது.

சப்போர்ட் சிஸ்டம்

சப்போர்ட் சிஸ்டம்

இவர்கள் இருவரும் இணைந்து விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளனர். சாந்தனுவின் வளர்ச்சிக்கும் கிகி சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கணவரே தன்னுடைய சப்போர்ட் சிஸ்டம் என்று கிகி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கம் தெரிவித்துள்ளார்.

அழகிய புகைப்படம் பகிர்வு

அழகிய புகைப்படம் பகிர்வு

மேலும் இருவரும் இணைந்துள்ள அழகிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் அழகு அள்ளுகிறது. அதிலும் சாந்தனு தன்னுடைய குறும்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் கிகி அமைதியாக தன்னுடைய கணவரின் அருகாமையை என்ஜாய் செய்யும்படியாக புகைப்படம் அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X