360 டிகிரில கீர்த்தி சுரேஷ் தலை கீழா நிக்கிறதை பார்க்கணுமா?.. அவரே வெளியிட்ட வேறலெவல் வீடியோ இதோ!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா செய்வதில் அதிக ஆர்வம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான யோகா செய்யும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், புதிதாக அவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகவே சிரசாசனம் எனப்படும் தலைகீழாக நின்று யோகா செய்யும் ஆசனத்தை பலரும் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு சுவற்றின் உதவியோடு செய்வது வழக்கம்.

Keerthy Suresh 360 degree upside down yoga video goes trending

ஆனால், 'நான் கடவுள்' ஆர்யா போல வெட்டவெளியில் தோட்டத்தில் தலைகீழாக நின்று யோகாசனம் செய்யும் வீடியோவை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பாலிவுட் என்ட்ரி: மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், அடுத்ததாக பாலிவுட்டில் விரைவில் அறிமுகமாக உள்ளார். அட்லீ இயக்கத்தில் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமானது போல, அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ஏற்கனவே போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவகன் நடிப்பில் வெளியான மைதான் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க வேண்டியது. ஆனால், கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக கடைசி நேரத்தில் பிரியாமணியை ஒப்பந்தம் செய்தனர். பல ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெளியான அந்த திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh 360 degree upside down yoga video goes trending

விஜய் அட்மின் தயாரிப்பில்: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சய் வீட்டின் அருகே வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், விஜய்யின் அட்மினாக இருந்த ஜெகதீஷ் ப்ளிஸ் தயாரிப்பில் உருவாக்கி வரும் ரிவால்வர் ரீட்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என வரிசையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

சைரன் ஓடல: கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் பகத் ஃபாசில் நடித்த மாமன்னன் படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அந்த படமும் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால் இந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் 108 திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு கை கொடுக்கவில்லை.

தலைகீழாக கீர்த்தி சுரேஷ்: சூரிய நமஸ்காரம், யோகா என உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது தோட்டத்தில் தலைகீழாக நின்றபடி யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 360 டிகிரி சுற்றும் அந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சிகரமான ஜிம் உடையை அணிந்து கொண்டு தலைகீழா நின்றபடி யோகா செய்துள்ளார். அவருடயை செல்ல நாய்க்குட்டியும் அவர் அருகே அமைதியாக அந்த வீடியோவில் இருக்கிறது.

Keerthy Suresh 360 degree upside down yoga video goes trending

பார்ட்டிகளில் கீர்த்தி சுரேஷ்: சமீபத்தில் சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு நடனமாடிய போட்டோக்களை கீர்த்தி சுரேஷ் ஷேர் செய்திருந்தார். பேபி ஜான் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் வருண் தவானின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகி டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் தெறி படத்தின் இந்தி ரீமேக் தான் பேபி ஜான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X