ஜோடி கீர்த்தி: அப்போ, காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்னது?
சென்னை: ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
அது அரசியல் சார்ந்த படம் என்று கூறப்படுகிறது.

கீர்த்தி
ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் ஏ. ஆர். முருகதாஸ். தொடர்ந்து சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி போடும் கீர்த்தி இந்த படம் மூலம் சூப்பர் சீனியரின் ஜோடியாக உள்ளார்.

நடிகை
தன் மகள்களை விட சிறு வயது நடிகைகளுடன் இனி ஜோடி சேர்ந்து நடிக்கப் போவது இல்லை என்று காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் மகள்களை விட மிகவும் சிறியவரான கீர்த்தியுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.

மாற்றம்
ஹீரோயின் வயது பற்றி ரஜினிகாந்த் தெரிவித்தது ஏ. ஆர். முருகதாஸுக்கும் தெரியாமல் இருக்காது. ஹீரோயின் தேர்வில் ரஜினி தலையிடுவது இல்லை. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல்
முருகதாஸ் படத்தில் ரஜினி முதல்வர் ஆகிறாராம். அந்த தகவல் அறிந்தவர்கள் முதலில் அவரை கட்சி துவங்கச் சொல்லுங்கள் அப்புறம் முதல்வர் ஆகலாம். அவரால் படத்தில் மட்டுமே முதல்வர் ஆக முடியும் என்று விமர்சித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











