கீர்த்தி சுரேஷ் இவ்வளவு கிளாமரா?.. பார்ட்டியில் போட்டிருக்கும் ட்ரெஸ்ஸ பாருங்க.. கணவரோடு செம ஆட்டம்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த வருடம் கோவாவில் வைத்து ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதில் அவர் ஆர்வம் காட்டிவருகிறார். இந்தச் சூழலில் அவர் தனக்கு நெருங்கியவர்களுக்கு கோலாகலமான பார்ட்டி ஒன்றை வைத்திருக்கிறார். அதில் கீர்த்தி அணிந்துவந்த ஆடையை பார்த்த ரசிகர்கள் பலரும் வாயடைத்து போயிருக்கிறார்கள்.

நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர். அதனைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு ரஜினி முருகன் படத்தில் அவர் நடித்து பட்டித்தொட்டியெங்கும் ஃபேமஸ் ஆனார். அப்படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு தமிழில் வரிசையாக கீர்த்திக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம், தனுஷ் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் அவர்.

Keerthy Suresh Antony Thattil

மகாநடிக்கு தேசிய விருது: தமிழில் கலக்கிவந்த கீர்த்திக்கு தெலுங்கு திரையுலகம் மகாநடி படத்தில் கதவை திறந்தது. நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான அந்தப் படத்தில் சாவித்திரியாக கீர்த்தி நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சில காலம் தமிழில் தலை காட்டாமல் இருந்தார். அப்படிப்பட்ட சூழலில் அவருக்கு நல்லதொரு கம்பேக்காக மாமன்னன் திரைப்படம் அமைந்தது.

Keerthy Suresh Antony Thattil

பாலிவுட்டிலும் என்ட்ரி: மாமன்னன் படத்துக்கு பிறகு சைரன், ரகுதாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து பாலிவுட்டுக்குள் நுழைந்தார். அந்தப் படத்தில் வருண் தவானுடன் ஆடிய ஒரு பாடலில் ஓவர் கிளாமர் காண்பித்து அனைவரையும் கிறங்கடித்தார். தமிழில் கிளாமர் ரோலே செய்யாத அவர் பாலிவுட்டுக்கு சென்றதும் ஆளே மாறிவிட்டாரே என்று ரசிகர்கள் ஓபனாக கூறினார்கள். இதற்கிடையே அவரை சுற்றி காதல் சர்ச்சைகளும் தொடர்ந்து எழ ஆரம்பித்தன.

Keerthy Suresh Antony Thattil

திருமணம்: அப்படிப்பட்ட சூழலில்தான் தானும், ஆண்டனி தட்டில் என்பவரும் 10 வருடங்களுக்கும் மேலாக காதலித்துவருகிறோம் என்று கீர்த்தி அறிவித்தார். காதலை வெளிப்படையாக அறிவித்த கையோடு திருமண ஏற்பாடுகளையும் அவரது குடும்பத்தினர் செய்ய தொடங்கினர். அதன்படி கடந்த வருடம் கோவாவில் வைத்து இரண்டு பேரும் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்கள். அத்திருமணத்தில் விஜய், திரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Keerthy Suresh Antony Thattil

செம பார்ட்டி: திருமணத்துக்கு பிறகும் கீர்த்தி நடிப்பார் என்பது அவரது செயல்பாடுகளின் மூலம் ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது. ஏனெனில் திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு செல்லாமல் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக கலந்துகொண்டார். இந்நிலையில் தனது கணவர் ஆண்டனி தட்டிலுடன் இணைந்து தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பார்ட்டி வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அந்தப் பார்ட்டிக்கு பச்சை நிற உடையில் படு கிளாமராக வந்திருந்த அவர்; கணவருடன் சேர்ந்து சரியான ஆட்டம் போட்டிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நிலையில் அந்த ஃபோட்டோக்கள் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கின்றன.

Keerthy Suresh Antony Thattil

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X