ஹனிமூன் முக்கியமல்ல.. திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் பார்த்த வேலை.. அந்த தாலி தான் ஹைலைட்!

மும்பை: சில முன்னணி நடிகைகள் பட புரமோஷன்களை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கெல்லாம் செல்லாமல் மும்பைக்கு கிளம்பிச் சென்றிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமா மீது அவர் வைத்திருக்கும் ஆர்வமும் பற்றும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பார்த்து ரசிகர்கள் பூரித்துப் போய்விட்டனர்.

அட்லீ தயாரிப்பில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. கிறிஸ்துமஸ் தின ட்ரீட்டாக வெளியாகும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் சமந்தா தமிழில் நடித்திருந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

keerthy suresh baby john honeymoon

கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு அட்லீ வந்து கலந்துக் கொண்ட நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற பேபி ஜான் பட புரமோஷனில் சிகப்பு நிற கிளாமர் உடையை அணிந்துக் கொண்டு கழுத்தில் தாலியுடன் கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

keerthy suresh baby john honeymoon

ரகுல் ப்ரீத் சிங் கத்துக்கணும்: இந்த ஆண்டு ஜாக் பக்னானி எனும் தயாரிப்பாளரை திருமணம் செய்துக் கொண்ட ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த போது அவரது கழுத்தில் தாலி இல்லையே என ரசிகர்கள் கிண்டலடித்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பேபி ஜான் பட புரமோஷனுக்கு கழுத்தில் மஞ்சக் கயிறுடன் வந்த கீர்த்தி சுரேஷை பார்த்த ரசிகர்கள் ரகுல் ப்ரீத் சிங் இவரை பார்த்து கத்துக்கணும் என கமெண்ட் போட்டு வருகின்றனர். அதெல்லாம் அவரவர் விருப்பம் என்றும் ரசிகர்கள் ரகுல் ப்ரீத் சிங்குக்கும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹனிமூன் முக்கியமில்லை: 15 ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் கணவரை திருமணம் முடிந்தவுடன் ஹனிமூனுக்கு கூட்டிக் கொண்டு வெளிநாட்டுக்குப் பறக்காமல் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுற படத்துக்கு நாம புரமோஷனுக்கு செல்ல வேண்டும் என்கிற முனைப்புடன் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கவர்ச்சி உடையையும் அணிந்துக் கொண்டு புரமோஷனுக்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

keerthy suresh baby john honeymoon

வாழ்த்திய வருண் தவான்: திருமணம் முடிந்த கையோடு பேபி ஜான் புரமோஷனுக்கு வந்த கீர்த்தி சுரேஷை மேடையிலேயே கலாய்த்து வாழ்த்தினார் வருண் தவான். நான் ஒருவன் தான் இங்கே கல்யாணமானவனாக இருந்தேன். இப்போ அந்த க்ரூப்பில் கீர்த்தி சுரேஷும் ஜாய்ன் ஆகிட்டாங்க என வாழ்த்தியுள்ளார். அட்லீ, வாமிகா கபி உள்ளிட்ட படக்குழுவினர் கீர்த்தி சுரேஷுக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

keerthy suresh baby john honeymoon

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X