Keerthy Suresh: ஸ்லீப்பிங் பியூட்டியா? கீர்த்தி சுரேஷை பங்கம் செய்யும் இணையவாசிகள்.. செம வீடியோ!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தான் கடந்த இரண்டு வாரங்களாக ஹாட் ஆஃப் த டாப்பிக்காக இந்திய திரைத்துறையில் உள்ளார். வரும் 25ஆம் தேதி பேபி ஜான் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதேபோல், கடந்த 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாகவே கீர்த்தி சுரேஷ் கடந்த சில வாரங்களாக செய்திகளில் அடிக்கடி அடிபடுகின்றார். இப்படியான நிலையில், கீர்த்தி சுரேஷ் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ள படம், பேபி ஜான். தமிழில் அட்லீ இயக்கி, விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் இந்தப் படம். இந்தப் படத்தினை ஹிந்தியில் அட்லீ தயாரித்துள்ளார். படத்தினை கிருஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் செய்தால் சிறப்பாக இருக்கும் என படக்குழு திட்டமிட்டு, ப்ரோமோசன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.

keerthy suresh keerthy suresh wedding

இப்படியான நிலையில், கடந்த 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ், நேற்று அதாவது, டிசம்பர் 18ஆம் தேதி பேபி ஜான் படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் படக்குழுவுடன் கலந்து கொண்டுள்ளார். இதில் கழுத்தில் தாலி மட்டும் அணிந்து கலந்து கொண்டது, பலரது கவனத்தினை ஈர்த்தது. இது மட்டும், இல்லாமல் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது திருமணப் புகைப்படங்களை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து வருகின்றார்.

keerthy suresh keerthy suresh wedding

கீர்த்தி சுரேஷ்: நேற்று முன் தினம், விஜய்யின் அட்மினுக்கு கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது காதல் கணவர் ஆண்டனி தட்டில் முத்தம் கொடுப்பதைப்போல், போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இது பலருக்கும் ஷாக் கொடுத்தது. இந்நிலையில், நேற்று இரவு, விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்திற்கு, " எங்களின் கனவு நாயகன் எங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு எங்களை வாழ்த்திய தருணம்" என கேப்ஷன் இட்டுள்ளார்.

keerthy suresh keerthy suresh wedding

வீடியோ: நடிகை கீர்த்தி சுரேஷ்ஷின் க்யூட்டான ரியாக்‌ஷன்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவரது க்யூட்டான ரியாக்‌ஷன்கள்தான், அவரை தமிழ் சினிமாவிலும், உச்சத்துக்கொண்டு கொண்டுவர முக்கியமான காரணமாக இருந்தது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, திருமணத்திற்காக கீர்த்தி சுரேஷ் மேக்-அப் போட்டுக் கொண்டு இருக்கும்போது, அவரது நண்பர்கள் எடுத்த வீடியோ, இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இது பலரது கவனத்தினை ஈர்த்தது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் இப்போதும் க்யூட்டாகத்தான் இருக்கின்றார் எனக் கூறி வருகின்றனர்.

keerthy suresh keerthy suresh wedding

ஸ்லீப்பிங் பியூட்டி: அதாவது, பேபி ஜான் படத்தின் ப்ரோமோசனில் கலந்து கொள்ள கீர்த்தி சுரேஷ் மேக் அப் போட்டுக் கொண்டு இருக்கும்போது, களைப்பில், நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்த அவரது நண்பர்கள், அதற்கு, டீசல் படத்தில் இடம் பெற்றுள்ள, பாடலை பின்னணியில் சேர்த்து பகிர்ந்துள்ளனர். பாடலின் மெட்டுக்கு ஏற்றவகையில் அவர் தூங்கி விழுவது இருப்பதால், ரசிகர்கள் ஸ்லீப்பிங் ப்யூட்டி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X