Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ப்ரம்மன் வரைந்த ஓவியமா இவள்..? கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வெற்றிகளை கொடுத்து வருகிறார்
கதாநாயகியாக மட்டும் நடித்து வரும் அதேசமயம் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்து கலக்கி இருப்பார்
தமிழ் மலையாளம் தெலுங்கு என தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது பிரம்மன் வரைந்து வைத்த ஓவியம் போல சிலையாக இருக்கும் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அட்டகாசமான கிராஃபிக்ஸ்.. படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும்.. அயலான் சீக்ரெட்டை உடைத்த எடிட்டர்!

சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை
தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான மகாநடி திரைப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்து அசத்தி இருந்த அவருக்கு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தது. இந்த நிலையில் மகாநடி கொடுத்த வெற்றியை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு அதைத்தொடர்ந்து பெண்குயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின இப்பொழுது குட்லக் சகி என்ற திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது.

துப்பாக்கி சுடும் வீராங்கனையாக
தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் குட்லக் சகி திரைப்படத்தில் பழங்குடியின பெண் பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு பின் கொரோனா பரவல் காரணமாக பலமுறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இறுதியாக ஜனவரி 28ம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணன் தங்கை பாசம்
சூர்யா,விக்ரம், சிவகார்த்திகேயன் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக தங்கை வேடத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் சூப்பர் ஸ்டாரின் துள்ளலான நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷின் அண்ணன் தங்கை பாசம் மிக நன்றாகவே இருந்தது.

ப்ரம்மன் வரைந்த ஓவியம்
அண்ணாத்த வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக போலோ சங்கர் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்து வருகிறார். இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் ப்ரம்மன் வரைந்து வைத்த ஓவியமாக சிலையாக நிற்கும் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.