சிவகார்த்திக்கேயனுக்காக கீர்த்திசுரேஷ் எடுத்த அதிரடி முடிவு!
சீமராஜா படத்தில் கீர்த்தி சுரேஷ் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.
சென்னை: சிவகார்த்திக்கேயனின் சீமராஜா படத்தில் கீர்த்தி சுரேஷ் கவுரவத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திக்கேயன் -பொன்ராம் இணைந்துள்ள படம் சீமராஜா. இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு இமான் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். 24 ஏ.எம் நிறுவனம் சார்பில் ராஜா தயாரிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கவுரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக 24 ஏஎம் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மகிழ்ச்சி:
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "'சீமராஜா' படத்தில் நானும் இணைவதில் பெருமை கொள்கிறேன். அந்தப் படப்பிடிப்புக் குழுவினருடன் இணைவது மகிச்சியாக உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
கை நிறையப் படங்கள்:
முன்னதாக சிவகார்த்திகேயனும், கீர்த்தி சுரேஷும் 'ரஜினி முருகன்', 'ரெமோ' படங்களில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது கீர்த்தி சுரேஷ் சாமி 2, விஜய் படம், சண்டக்கோழி 2 என பிசியாக நடித்து வருகிறார்.

கவுரவத் தோற்றம்:
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான நடிகையர் திலகத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. இந்த சூழ்நிலையில் அவர் சீமராஜாவில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க சம்மதித்திருப்பது பலரையும் ஆச்சர்யப் படுத்தியுள்ளது.

ரிலீஸ்:
சீமராஜா படத்தின் ஷூட்டிங் தென்காசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. வரும் செப்டம்பர் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் இப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











