Keerthy Suresh: பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு தெரியுமா?

Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகை. இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் மலையாளத்தை விடவும், தமிழ் மற்றும் தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் கவனிக்கத்தகுந்த படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவர் இன்று தனது 32வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இந்நிலையில் அவருக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்தும் அவரது திரை வாழ்க்கை குறித்தும் இந்தத் தொகுப்பில் காணலாம்.

keerthy suresh

கீர்த்தி சுரேஷைப் பொறுத்தவரையில் கோலிவுட்டில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் படம் இவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது எனக் கூறலாம். மேலும், இந்தப் படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்கள் இவரை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது. இந்தப் படத்திற்குப் பின்னர் தமிழில் மோஸ்ட் வாண்டேட் கதாநாயகியாக மாறினார்.

keerthy suresh

ஹோம்லியான நடிப்பு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகை, தமிழும் தெளிவாகப் பேசுவார் என்பதால், பெரும்பாலான தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக கீர்த்தி சுரேஷ் இருந்தார். இதனால் உச்ச நடிகர்களான விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த என பல படங்களில் நடித்து அதகளப் படுத்தினார். தெலுங்கிலும் உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்து தெலுங்கிலும் முன்னணி நடிகையாக மாறினார். இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் இவரது கிராஃப் சீராக உயர்ந்தது. மேலும் இப்போதுவரை தொடர்ந்து முன்னணி கதாநாயகியாகவே வலம் வருகின்றார்.

keerthy suresh

விருது: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (தெலுங்கு) தமிழில் நடிகையர் திலகம் படத்தில் நடித்தார். படத்தை பார்த்த அனைவருமே அசந்து போனார்கள். படம் பார்த்த அனைவருமே, இந்தப் படத்திற்கு குறிப்பாக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கட்டாயம் கிடைக்கும் என வாழ்த்த ஆரம்பித்துவிட்டார்கள். அதேபோல் தேசிய விருதும் அவரைத் தேடி வந்தது. கடைசியாக நேரடியாக தெலுங்கில் ரிலீஸ் ஆன தசாரா படத்தில் இவரது அசாத்திய நடிப்பு இவருக்கு சைமா விருதினைப் பெற்றுத்தந்தது.

keerthy suresh

இந்தி: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரகு தாத்தா. இந்தப் படத்திற்கு தியேட்டரில் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும், ஓடிடி தளத்தில் 150 மில்லியன் நிமிடங்களுக்கு மேல் ஸ்ட்ரீம் ஆன படமாக சாதனை படைத்துள்ளது. தற்போது கீர்த்தி சுரேஷ் இந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்துவருகிறார்.பேபி ஜான் தெறி படத்தின் இந்தி ரீ மேக்.

keerthy suresh

சொத்து மதிப்பு: இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 17ஆம் தேதி தனது 32வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 4 கோடிகள் வரை சம்பளம் பெறுகின்றார். இதனால் ஒரு ஆண்டுக்கு சுமார் 8 கோடிகள் வரை சம்பாதிக்கின்றார். இவர் தனது அறிமுகப் படமான 'இது என்ன மாயம்' படத்திற்காக சைமா விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை விருதினைப் பெற்றார். கடந்த ஆண்டு வெளியான தசரா படத்திற்கும் சிறந்த நடிகை விருதினைப் பெற்றார். இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூபாய் 41 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X