கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்... என்னமா ஆடுறாங்க!
கொச்சி : நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் சாணிக் காயிதம் தமிழில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ள கீர்த்தி, கிறிஸ்துமசை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து தொடர்ந்து அவருக்கு ஏறுமுகம் தான். சூர்யா, விஜய் என அவர் நடித்த படங்களின் பட்டியல் நீளம். விஜய்யுடன் இரண்டு படங்களில் அவர் நடித்துள்ளார்.

சிறப்பான நடிப்பு
குறைவான காலகட்டத்திலேயே இவர் தனது அழகு மற்றும் திறமையால் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். மேலும் சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநதி படத்தில் நடித்ததன்மூலம் தனக்கு சிறப்பாக நடிக்கவும் வரும் என்றும் நிரூபித்துள்ளார்.

விஜய் 66ல் கீர்த்தி?
விஜய்யின் அடுத்த படமான விஜய் 66 படத்திலும் கீர்த்திதான் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ராக்கி புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநுர் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பிசி
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், தற்போது தனது உடலை கணிசமாக குறைத்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக காணப்படும் இவர், அவ்வப்போது பிட்னஸ் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தயாரிப்பாளராக கீர்த்தி
தற்போது தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வாஷி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இவரது தந்தையும் மலையாளத்தில் முன்னணி தயாரிப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இந்நிலையில் கொண்டாட்டங்களையும் கீர்த்தி சுரேஷ் தவிர்ப்பதில்லை. தன்னுடைய குடும்பத்தினருடன் தனது கொண்டாட்டத்தை அவர் அவ்வப்போது தனது ட்விட்டர் தளங்களில் பதிவிட்டு விடுகிறார். இந்நிலையில் கிறிஸ்துமசையொட்டி, சில குட்டீஸ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் அவர் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் படங்கள் ரசிகர்கள மனதை கொள்ளைக் கொண்டுள்ளன. தனது ட்ரேட்மார்க் புன்னகையுடன் இந்த புகைப்படங்களில் காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











