என்ன கொடுமை சரவணா.. ’ஐஸ் க்ரீம் பஜ்ஜி’ வீடியோவை பார்த்த கீர்த்தி சுரேஷ்.. ரியாக்ஷனை பாருங்க!
சென்னை: உணவு பிரியையான கீர்த்தி சுரேஷையே ஒரு சமையல் வீடியோ ஷாக் ஆக்கியுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சாக்லேட் தோசை செய்து அசத்திய கீர்த்தி சுரேஷையே மயக்கம் அடைய செய்யும் விதமாக இப்படியொரு புது வகையான டிஷ்ஷை உருவாக்கியுள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான ரகு தாத்தா திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய வரவேற்பு இந்த படத்துக்கு கிடைக்கும் என ரொம்பவே நம்பிக்கையுடன் இருந்த கீர்த்தி சுரேஷுக்கு அவர் நினைத்தது நடக்கவில்லை என்பது பெரிய வருத்தம் தான்.

ஆனாலும், தனியாளாக தனது படங்களுக்கு புரமோஷன் செய்து வரும் கீர்த்தி சுரேஷ் படம் வெளியான பின்னரும், யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக் கொடுத்து தனது படத்தை முடிந்த வரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க போராடி வருகிறார்.
சாப்பாடு பிரியை: நடிகை கீர்த்தி சுரேஷ் சரியான சாப்பாடு பிரியை என அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் வெளியே போக முடியாமல் சிக்கிக் கொண்ட நிலையில், அவருக்கு உணவுகளை வழங்கிய ப்ரீத்தி சஞ்சீவ் உடனும் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாக்லேட் தோசை ஸ்பெஷலிஸ்ட்: புதுவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடும் நபர் தான் நம்ம கீர்த்தி சுரேஷ் தனது குழந்தைகளுக்கு சாக்லேட் தோசை எல்லாம் சுட்டுக் கொடுத்து அசத்துவார் என ப்ரீத்தி சஞ்சீவ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியிருந்தார்.
ஐஸ்க்ரீம் பஜ்ஜி கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்: புதுவிதமான உணவுகளை செய்கிறேன் என்கிற பெயரில் ஐஸ்க்ரீம்களை வைத்து பஜ்ஜி போடும் வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வெளியான நிலையில், அதை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ் ”Oh Noo!!” என கமெண்ட் போட்டுள்ளார். ஏற்கனவே நார்த் இந்தியாவில் தக்காளி பஜ்ஜி, பான் பீடாவை வைத்து வாந்தி வரக்கூடிய பலவிதமான ஐட்டங்கள் உருவாக்கப்படுவதாக ட்ரோல் வீடியோக்கள் எல்லாம் வெளியாகி வரும் நிலையில், ஐஸ்க்ரீமில் பஜ்ஜி போட்டுத் தருவது எல்லாம் ரொம்பவே ஓவர் பாஸ் என்கின்றனர்.

கன்றாவி காம்பினேஷன்: ஐஸ்க்ரீமை ஃப்ரைடு சிக்கன் போல எல்லாம் செய்து சென்னையிலேயே பல ரெஸ்டாரன்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. சூடா சாப்பிடுவதையும், சில்லுன்னு சாப்பிடுவதையும் மிக்ஸ் செய்து என்னவொரு கன்றாவி கம்பினேஷனில் இப்படியெல்லாம் செய்யுறாங்க என்பதே புரியவில்லை என்கின்றனர். இடக்கு மடக்கா ஏதாவது சாப்பிட்டு அதன் பின்னர் வாந்தி, மயக்கம், உடல்நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதாகவும் கமெண்ட்டுகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











