இன்னைக்கு கீர்த்தி சுரேஷ் வீட்ல என்ன ஸ்பெஷல் தெரியுமா.. இன்ஸ்டா ஸ்டோரியில அவரே போட்டுருக்காரே!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இன்னைக்கு அவங்க வீட்ல செஞ்ச ஸ்பெஷல் டிஷ் வீடியோவை போட்டுள்ளார்.

Recommended Video

Keerthy Suresh Reveals her quarantine Partner | Lock Down

இந்த ஒரே ஒரு கொரோனா வைரஸ் வந்ததும் வந்தது, பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்த ஹீரோயின்களை எல்லாம், கிச்சன் பக்கம் சென்று, வித விதமான டிஷ்களை தினமும் செய்ய வைத்து வருகிறது.

லாக் டவுன் நேரத்தில் குடும்பத்துடன் செலவிடும் பிரபலங்கள், தங்களுக்கு பிடித்த உணவுகளை தாங்களே செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

திருமண செய்தி

திருமண செய்தி

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு, கேரளாவை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்னதாக திருமண செய்தி ஒன்று வைரலாக பரவியது. ஆனால், அதனை கீர்த்தி சுரேஷ் தரப்பு மறுத்துள்ளது.

நடிக்கணும்

நடிக்கணும்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்துள்ள கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது, திருமணத்தை பற்றி சிந்திக்க அவருக்கு இப்போது நேரமே இல்லை. லாக் டவுன் மட்டும் இல்லையென்றால், மோகன் லாலுடன் அவர் நடித்த மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படம் வெளியாகி இருக்கும்.

கிச்சன் பக்கம்

கிச்சன் பக்கம்

ஷூட்டிங்கில் தொடர்ந்து பிசியாக இருந்த ஹீரோயின்கள் எல்லாம் இந்த குவாரண்டின் காலத்தில் கிச்சன் பக்கம் சென்று வித விதமான டிஷ் செய்து, தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, வைரலாக்கி வருகின்றனர். அதேபோல நடிகை கீர்த்தி சுரேஷும், இன்று தனது வீட்டில் செய்த ஸ்பெஷல் டிஷ் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

வாழைப்பழ தோசை

வாழைப்பழ தோசை

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முட்டை தோசை போட்டதும், டல்கோனா காஃபி செய்ததும் டிரெண்டான நிலையில், தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கிச்சனில் இன்று, வாழைப்பழ தோசையை செய்து அசத்தியுள்ளார். தேன் ஊற்றி கீர்த்தி சுரேஷ் தோசை செய்யும் அழகை பார்த்தாலே நாக்கில் பலருக்கும் எச்சில் ஊறும்.

விளக்கு ஏற்றினாரா?

விளக்கு ஏற்றினாரா?

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே என பல நடிகைகள் வீட்டில் தீப ஒளியை ஏற்றிய புகைப்படங்களை பதிவிட்டனர். ஆனால், கீர்த்தி சுரேஷின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் விளக்கு ஏற்றியது போன்ற எந்தவொரு புகைப்படங்களும் வெளியாகவில்லை என்பது, அவர் விளக்கு ஏற்றினாரா? என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X