கழுத்தில் தாலியுடன் சல்மான் கானுடன் கீர்த்தி சுரேஷ் குத்தாட்டம்.. அடுத்த பாலிவுட் சான்ஸ் கிடைக்குமா?
சென்னை: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக தமிழில் ரகுதாத்தா, சைரன், மாமன்னன் ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் மாமன்னன் படம் மட்டும்தான் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதேசமயம் ரகுதாத்தா படம் கதை ரீதியாக நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதால் படம் சரியான வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா, பேபி ஜான் படங்கள் வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இன்னும் சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்தது.
மலையாள திரையுலகில் அறிமுகமாகி பிறகு தமிழில் ஹீரோயினாக வந்தவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் அவருக்கு ஆரம்பத்தில் சில படங்கள் கைகொடுக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஒரு கண்ணு பாடலில் கீர்த்தி சுரேஷின் எக்ஸ்பிரெஷன் எல்லாம் நன்றாக இருந்ததை அடுத்து ரசிகர்களின் கண்கள் கீர்த்தி சுரேஷை கவனிக்க ஆரம்பித்தன.

தொடர் வாய்ப்புகள்: அதனையடுத்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வரிசையாக வர ஆரம்பித்தன. அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜினியுடன் அண்ணாத்த என வரிசையாக படங்களில் நடித்தார். அவர் வரிசையாக நடித்து நல்ல நடிகை என்ற பெயரை எடுத்தாலும் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க அவர் தெலுங்கில் மகாநடி என்ற படத்தில் நடித்தார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான அந்தப் படம் கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.
தமிழில் ரீ எண்ட்ரி: இதற்கிடையே தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் அவருக்கு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. அதில் அவருக்கு பெரிய ஸ்பேஸ் கிடைக்காவிட்டாலும் கிடைத்ததில் தனது நடிப்பை தரமாக வெளிப்படுத்தினார். தொடர்ந்து சைரன் படத்தில் நடித்த அவருக்கு மீண்டும் தோல்வியே கிடைத்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா வெளியானது. மேலும் ரிவால்வர் ரீட்டா, பேபி ஜான் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
உச்சக்கட்ட கிளாமர்: ஹிந்தியில் ரிலீஸாகவிருக்கும் பேபி ஜான் படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிளில் கீர்த்தி சுரேஷ் உச்சக்கட்ட கிளாமரை காண்பித்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துதான் போனார்கள். நிச்சயம் அவர் ஹிந்தியில் தொடர்ந்து நடிப்பார் என்று கணிக்கப்பட்ட சூழலில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார். ஆண்டனி தட்டில் என்பவருடன் அவருக்கு கோவாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ப்ரோமோஷனில் பிஸி: திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு அவர் செல்வார் என்று பார்த்தால் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனில் படு பிஸியாக இருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் நடந்த ப்ரோமோஷனில் சல்மான் கானுடன் செம ஆட்டம் போட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் யப்பா கீர்த்தி இவ்வளவு சின்சியரா இருக்காங்களே. கண்டிப்பாக திருமணத்துக்கு பிறகும் நடிப்பார் போலிருக்கிறது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











