ஆண்டாள் போல அழகு.. தாலி கட்டும் போது கீர்த்தி சுரேஷை பார்த்தீங்களா.. மாப்பிள்ளை வயது தெரியுமா?
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 32வது வயதில் இன்று கோவாவில் திருமணம் செய்துக் கொண்டார். 1992ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பிறந்தவர் கீர்த்தி சுரேஷ். நடிகை மேனகாவுக்கும் இயக்குநர் சுரேஷுக்கும் மகளாக பிறந்தார். கேரளாவில் வளர்ந்து வந்த கீர்த்தி சுரேஷ் 2000ம் ஆண்டு வெளியான பைலட்ஸ் எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் மோகன்லாலின் கீதாஞ்சலி படத்தில் நடித்தார். ரிங் மாஸ்டர் படத்தில் நடித்த பின்னர் 2014ம் ஆண்டு தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் ஹிட் அடித்த நிலையில், அவருடன் இணைந்து ரெமோ, சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ் உடன் தொடரி, விஷால் உடன் சண்டக்கோழி 2, விஜய்யுடன் பைரவா, சர்க்கார், சியான் விக்ரமுடன் சாமி ஸ்கொயர், ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த, ஜெயம் ரவியுடன் சைரன், உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கோவாவில் கீர்த்தி சுரேஷ் திருமணம்: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவில் தனது திருமணத்தை நடத்தாமல் ட்ரீம் வெட்டிங்காக கோவாவில் இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். 15 ஆண்டுகளாக நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலை காதலித்து வந்ததை படு ரகசியமாக வைத்திருந்ததே பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. கீர்த்தி சுரேஷின் காதலருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா? அவர் வயதானவரா? என பல கேள்விகள் மற்றும் வதந்திகள் உலா வரும் நிலையில், கீர்த்தி சுரேஷின் காதலர் வயது குறித்தும் அவரை பற்றியும் இங்கே பார்க்கலாம்.

கீர்த்தி சுரேஷ் கணவர் வயது: நடிகை கீர்த்தி சுரேஷுக்கு 32 வயதாகும் நிலையில், அவருடைய கணவருக்கு 45 வயதுக்கு மேல் இருக்கும் என்றெல்லாம் வதந்திகள் உலா வருகின்றன. ஆனால், கீர்த்தி சுரேஷின் காதலர் ஆண்டனி தட்டில் வயது 34 தானாம். கீர்த்தி சுரேஷ் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆண்டனி தட்டில் கீர்த்தி சுரேஷை புரபோஸ் செய்து காதலிக்க ஆரம்பித்துள்ளார் என்கின்றனர்.
ஆண்டாள் போல அழகு: நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண்டாள் போல அழகாக திருமண கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் தனது காதல் கணவர் தாலி கட்டுவதை ரசித்து பார்த்து சிரிக்கும் காட்சியை சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் சிலாகித்துக் கொண்டாடி வருகின்றனர். சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் இந்தியில் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளார் அதற்குள் திருமணம் செய்துக் கொண்டாரே என ரசிகர்கள் சற்றே அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.

பேபி ஜான் வருது: அட்லீ தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், வருண் தவான், வாமிகா கபி நடிப்பில் உருவாகி உள்ள பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தின ரிலீஸாக வெளியாகிறது. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த படம். சமந்தா தமிழில் நடித்த டாக்டர் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











