எவ்வளவு பயம்.. கீர்த்தி சுரேஷின் தீபாவளி கொண்டாட்டத்தை பாருங்க.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியானது. ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்தச் சூழலில் கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, ரஜினியுடன் அண்ணாத்த என பல படங்களில் நடித்தார்.

keerthy suresh diwali 2024

சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.

தேசிய விருது: இதற்கிடையே நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

ரகுதாத்தா: அவரது நடிப்பில் கடைசியாக கடந்த ஆகஸ்ட் 15 அன்று ரகுதாத்தா படம் வெளியானது. இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் வெளியாகவிருக்கிறது. அதேபோல் ஹிந்தியில் பேபி ஜான் படம் வெளியாகிறது. பேபி ஜான் திரைப்படம் தெறி படத்தின் ரீமேக் என்பதும்; அதனை அட்லீ தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீபாவளி கொண்டாட்டம்: இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் அவர் தனது தீபாவளி கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் பெரிய வெடியை வைக்கும் கீர்த்தி சுரேஷ்; உச்சக்கட்ட பயத்தோடு அதை பற்ற வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் பதற்றத்தில் அவரால் கடைசிவரை அந்த வெடியை பற்ற வைக்கவே முடியவில்லை. அதனை கண்டு அருகில் இருந்தவர்கள் கிண்டல் செய்கிறார்கள். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், கீர்த்திக்கு எவ்வளவு பயம் என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X