அஜித்துக்கு முன்னாடியே கார் ரேஸில் கலக்கிய கீர்த்தி சுரேஷ்.. நிவேதா பெத்துராஜுக்கு செம போட்டி!
அபுதாபி: நடிகை கீர்த்தி சுரேஷ் துபாயில் கார் ரேஸ் ஓட்டுவது போன்ற வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பின்னர் ஹீரோயினாக அறிமுகமான அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக மாறினார். தற்போது பாலிவுட்டில் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள அட்லீ தயாரித்துள்ள தெறி படத்தின் இந்தி ரீமேக் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.
சமீப காலமாக அடிக்கடி துபாய்க்கு சுற்றுலா சென்று வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது துபாயில் ரேஸ் கார் ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஜனவரியில் அஜித்: நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என அனிருத் பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியது அஜித் ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் பட்சத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் சில மாதங்கள் தள்ளிப் போய் சம்மருக்கு வெளியாகும் என தெரிகிறது. அஜித் வரும் ஜனவரி மாதம் துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்கிறார்.

சென்னையில் ஃபார்முலா 4: கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்திக் காட்டி அசத்தினார் உதயநிதி ஸ்டாலின். அதன் பின்னர் துணை முதல்வராகவும் அவர் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் தற்போது ரசிகர்கள் மத்தியில் கார் பந்தயம் தொடர்பான ஆர்வம் பற்றிக் கொண்டிருக்கிறது.

ரேஸ் கார் ஓட்டும் கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது அபுதாபியில் ரேஸ் கார் ஓட்டும் பயிற்சியை மேற்கொண்டு ரேஸ் காரை டிராக்கில் மற்ற போட்டியாளர்களுடன் ஓட்டிக் காட்டி அசத்தியுள்ளார். அதன் வீடியோவை கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயத்துக்கான விளம்பரம் போல இது உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிவேதா பெத்துராஜுக்கு போட்டி: நடிகை நிவேதா பெத்துராஜும் முன்னதாக தனக்கு கார் பந்தயங்களின் மீதுள்ள ஆர்வத்தை வெளிக்காட்டினார். துபாயில் அவரும் வசித்து வரும் நிலையில், நிவேதா பெத்துராஜுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் கார் பந்தயம் ஒன்றை நடத்தலாமே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இனிமேல் லேடி தல கீர்த்தி சுரேஷ் தான் என்றும் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











