மத்தவங்களுக்கு தான் பிரச்சனை ஆனால் எனக்கு அது ஒரு கிக்: கீர்த்தி சுரேஷ்

By Siva

Recommended Video

Actress Keerthi Suresh: எல்லாம் தெரிந்து தான் சினிமாவுக்கு வந்தேன்- வீடியோ

சென்னை: எல்லாம் தெரிந்து தான் சினிமாவுக்கு வந்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் செல்கிறார். போனி கபூர் அஜய் தேவ்கனை வைத்து தயாரிக்கும் இந்தி படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் அவர் சினிமா வாழ்க்கை பற்றி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

பிரச்சனை

பிரச்சனை

நடிகர்கள், நடிகைகளுக்கு என்ன பிரச்சனை, அவர்கள் எல்லாம் ஜாலியாக, சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை நடிகர்கள், நடிகைகளுக்கும் கஷ்டம் உள்ளது.

குறை

குறை

நடிகர்கள், நடிகைகள் தங்களின் கஷ்டத்தை வெளியே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் தங்களின் சின்ன சின்ன ஆசைகளை விட்டுக் கொடுக்க வேண்டும். அவர்கள் எது செய்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள்.

சினிமா

சினிமா

நான் நடிகையானதன் மூலம் எந்த ஆசையையும் விட்டுக்கொடுக்கவில்லை. முன்பு போன்றே ஷாப்பிங் செல்கிறேன். நடிகையாக இருப்பது எனக்கு கஷ்டமாக இல்லை. ஒன்று வேண்டுமானால் மற்றொன்றை விட்டுக்கொடுக்க வேண்டும். பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அதை எல்லாம் தெரிந்து கொண்டு தான் நடிக்க வந்தேன்.

கிக்

கிக்

வெளியே சென்றால் மக்கள் அவர்களை மொய்த்துக் கொள்கிறார்கள், எங்கேயும் போக முடியவில்லை என்று நடிகர்கள், நடிகைகள் வருத்தப்படுவார்கள். எனக்கு அந்த வருத்தம் இல்லை. மக்கள் மொய்த்துக் கொள்வது பிடித்துள்ளது. அதிலும் ஒரு கிக் உள்ளது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X