Keerthy Suresh: ஆத்தி.. கீர்த்தி சுரேஷுக்குள்ள இப்படியொரு திறமையா.. என்னவொரு ஸ்ட்ரெச் பண்றாங்க!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள யோகா வீடியோ ரசிகர்களை மட்டுமின்றி பல பிரபலங்களையும் சக நடிகைகளையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் ஃபாசில் இயக்கி உள்ள மாமன்னன் படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார்.

மேலும், நடிகர் விஜய்யின் அட்மின் ஜெகதீஷ் ப்ளிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

Keerthy Suresh fully stretched her legs and shares a incredible yoga video

மாமன்னனில் மிரட்டல்: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். கல்லூரி விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், "நம்ம கொடி பறக்குது" பாடலுக்கு பாவாடை தாவணியில் செம சூப்பராக கீர்த்தி சுரேஷ் போட்ட டான்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும், மாமன்னன் டிரெய்லரிலும் கீர்த்தி சுரேஷ் பேசும் வசனங்களும் அவரது ரசிகர்களை ஈர்த்துள்ளன.

இப்படியொரு திறமையா?: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

ஏகப்பட்ட நடிகைகள் நேற்று யோகா செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தனர். திடீரென கீர்த்தி சுரேஷ் தாறுமாறாக தனது இரு கால்களையும் இந்த பக்கம் ஒன்று, அந்த பக்கம் ஒன்று என நீட்டி செம ஸ்ட்ச் செய்தபடி செய்த யோகா வீடியோ சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

வாய் பிளந்த பிரபலங்கள்: தொகுப்பாளினி டிடி நீலகண்டன் உள்ளிட்ட பிரபலங்கள் கீர்த்தி சுரேஷின் இந்த அசத்தலான யோகா வீடியோவை பார்த்து மிரண்டு போய் கமெண்ட்டுகளும் லைக்குகளும் போட்டு வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் இதுவரை இப்படியொரு கீர்த்தியை நாங்க பார்த்ததே இல்லை, ஜிம்னாஸ்டிக் வீரங்கனைகள் எல்லாம் தோத்து போயிடுவாங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

விஜய்க்கு வாழ்த்து சொல்வாரா: நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் இணைந்து பைரவா, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகையான கீர்த்தி சுரேஷ் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இன்றும் விஜய்யை வாழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X