விக்ஸ் விளம்பரத்துக்காக இப்படியா? கீர்த்தி சுரேஷின் போஸ்ட்டை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகைகள் இன்ஸ்டாகிராமில் Paid Partnership என பல விளம்பரங்களில் நடித்து சம்பாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் விக்ஸ் விளம்பரத்திற்காக வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ட்ரோல் மெட்டீரியல் ஆகி உள்ளது.
மேலும், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கீர்த்தி சுரேஷுக்கு Get Well Soon கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

தொடர் தோல்வி
அஜய் தேவ்கனின் மைதான் படத்திற்காக உடல் எடையை குறைத்து ஓடாய் தேய்ந்து போனதில் இருந்தே கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள் படு தோல்வியை தழுவி வருகின்றன. ஓடிடி ஹீரோயின் என்கிற பெயரையும் பெண்குயின், மிஸ் இந்தியா, குட் லக் சகி உள்ளிட்ட படங்கள் மூலம் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும், மே 6ம் தேதி வெளியாக உள்ள சாணிக் காயிதம் திரைப்படமும் ஓடிடி ரிலீஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட்டை பிடிப்பாரா
ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் கீர்த்தி சுரேஷுக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அதே போல, மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான அரபிக் கடலின் சிங்கம் படமும் ஓடவில்லை. சாணிக் காயிதம் டிரைலரில் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் படத்தின் ரிலீசுக்கு பிறகும் அதே போல மிரட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மகேஷ் பாபு படம்
ஆனால், அடுத்ததாக மகேஷ் பாபுவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா படத்தைத் தான் பெரிதும் நம்பி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த படம் ஹிட் ஆனால் தான் மீண்டும் முன்னணி நடிகை அந்தஸ்த்தையே கீர்த்தி சுரேஷ் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்களில் அவரது லுக்கே அவருக்கு எதிரியாக சமீப காலமாக மாறி உள்ளது தான் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

விக்ஸ் விளம்பரம்
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள விக்ஸ் விளம்பரம் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர். ஆவி பிடிப்பது போல அமர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷின் போட்டோவை பார்த்து, என்ன இப்படி ஆகிட்டாரே கீர்த்தி சுரேஷ் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

கெட் வெல் சூன்
விளம்பரத்தில் நடித்துள்ளதாக அறிவிப்புடன் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டு இருந்தாலும், அவருக்கே உடல் நலம் சரியில்லை என நினைத்து சில ரசிகர்கள் Get Well Soon Keerthy Suresh என கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், சிலர் கீர்த்தி சுரேஷின் முகத்துக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி டல் ஆகிட்டாரு என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











