விஜய் சேதுபதியின் மகாராஜா படத்துக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த விமர்சனம்.. அதை நோட் பண்ணீங்களா?

சென்னை: விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. நேற்று முன்தினம் அந்த படத்திற்கான பிரஷ் ஷோ திரையிடப்பட்டது. இந்நிலையில், நேற்று பிரபலங்களுக்கான பிரத்யேக பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது.

அந்த காட்சியை பார்த்துவிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது படத்துக்கும் படக்குழு உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு மிகப்பெரிய விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

Keerthy Suresh Vijay Sethupathi Maharaja Box Office Mamta Mohandas Abhirami Anuragh Kashyap

கடைசியில் நடிகர் விஜய்யின் அட்மின் மற்றும் தயாரிப்பாளரான ஜெகதீஷ் ப்ளிஸ்ஸுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளது ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளது.

பாராட்டு மழையில் விஜய் சேதுபதி: புதிய படங்கள் வெளியானால் முதல் நாள் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் பலரும் பாராட்டுவார்கள். ஆனால், விஜய் சேதுபதியின் மகாராஜா படத்துக்கு ப்ரீமியர் ஷோ காட்சிகளின் மூலம் மிகப்பெரிய பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நேற்று சினிமா பிரபலங்களுக்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்ட நிலையில், அதில் கலந்து கொண்டு படத்தைப் பார்த்த கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவான விமர்சனத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் விமர்சனம்: தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள மற்றொரு மிகப்பெரிய இயக்குநர் தான் நித்திலன் சுவாமிநாதன் என்றும் மகாராஜா படம் என்னமாதிரி இருக்கு தெரியுமா? அனைத்துக்கும் கிரெடிட் இயக்குநரை தான் சென்று சேர வேண்டும் என பாராட்டிய கீர்த்தி சுரேஷ், விஜய் சேதுபதி சாருக்கு 50வது படமாக பக்காவான ஒரு சிறந்த படம் கிடைத்துள்ளது என்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு எல்லாம் வேறலெவல் என பாராட்டியுள்ளார். அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோரின் நடிப்பையும் குறிப்பிட்டு கீர்த்தி சுரேஷ் பாராட்டி மிகப்பெரிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Keerthy Suresh Vijay Sethupathi Maharaja Box Office Mamta Mohandas Abhirami Anuragh Kashyap

விஜய் அட்மினுக்கு பாராட்டு: தளபதி விஜய்யின் அட்மினாக இருந்து வந்த ஜெகபதி தற்போது தி ரூட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அதில், உருவாகி வரும் ரிவால்வர் ரீட்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக புரமோஷன் வேலைகளை பார்த்துக் கொண்ட ஜெகதிஷுக்கும் தனது நன்றி தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். புர்ஜ் டு ஹாலிவுட் தான் என கீர்த்தி சுரேஷ் புர்ஜ் கலிஃபாவில் புரமோஷன் செய்ததை குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X