பாலிவுட் போகும் கீர்த்தி சுரேஷ்: ஆனால் அங்கும்...
Recommended Video

சென்னை: கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
கோலிவுட் நடிகைகள் பாலிவுட் செல்வது ஒன்றும் புதிது அல்ல. அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். பிரபல இந்திய கால்பந்தாட்ட வீரரும், பயிற்சியாளருமான செய்யது அப்துல் ரஹிமின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்குகிறார்கள்.
அமித் சர்மா இயக்கும் இந்த படத்தில் ரஹிமாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்
அஜய் தேவ்கன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். கீர்த்தி சுரேஷ் பாலிவுட் வருவதை போனி கபூரின் மகள் ஜான்வி மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மகாநதி படத்தை பார்த்ததில் இருந்து ஜான்வியால் கீர்த்தியை பாராட்டாமல் இருக்க முடியவில்லையாம்.

காஜல்
முன்னதாக அஜய் தேவ்கன் நடித்த ஹிம்மத்வாலா படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்தார். மேலும் சிங்கம் படத்தில் அஜய் தேவ்கனுடன் காஜல் அகர்வால் நடித்தார். அந்த படங்கள் தமன்னா மற்றும் காஜலுக்கு கை கொடுக்கவில்லை. அது தான் காஜல், தமன்னா பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிய படங்கள் ஆகும்.

கதாபாத்திரம்
அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கும் கீர்த்திக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்திய கால்பந்தாட்ட அணியின் வெற்றிகரமான காலங்களை காட்டும் படத்தில் கீர்த்திக்கு என்ன வேலை இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அக்ஷய் குமார்
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷாவும் பாலிவுட் போனார். அவரை காமெடி பீஸாக காட்டினார்கள். பாவம் ஆசை, ஆசையாய் பாலிவுட் சென்று அதே வேகத்தில் திரும்பி வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











