ரசிகர் செய்த செயல்.. மார்பை மறைத்து கீர்த்தி சுரேஷ் கொடுத்த ரியாக்ஷன்.. ரிவால்வர் ரீட்டானா சும்மாவா?
சென்னை: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ரிவால்வர் ரீட்டா. ஜே.கே.சந்துரு இயக்கியிருந்த அந்தப் படம் சுமாருக்கும் கீழ் என்ற விமர்சனத்தையே சந்தித்தது. திருமணத்துக்கு பிறகு நடித்து வெளியான படம் தோல்வியடைந்திருப்பது கீர்த்திக்கு கவலையை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி முருகன் படம் பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அதனையடுத்து வரிசையாக பல படங்களில் நடித்த அவர் தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்து சிற்ந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். அதற்கு பிறகு வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த கீர்த்திக்கு மாமன்னன் திரைப்படம் நல்லதொரு ரீ என்ட்ரியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ்: அதேபோல் பாலிவுட்டிலும் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து தடம் பதித்தார். அப்படத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே அவருக்கும் அவரது காதலர் ஆண்டனி தட்டிலுக்கும் கோவாவில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் கீர்த்திக்கு ஆண்டனியின் சப்போர்ட் முழுமையாக இருக்கிறது என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

ரிவால்வர் ரீட்டா: திருமணத்துக்கு பிறகு அவர் நடிப்பில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி ரிவால்வர் ரீட்டா திரைப்படம் வெளியானது. ஜே.கே.சந்துரு என்பவர் இயக்கியிருக்கும் அப்படத்தில் கீர்த்தியுடன் ராதிகா, சென்ராயன் என பலர் நடித்திருந்தார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்டாக உருவாகியிருந்த படத்துக்கு ரசிகர்களிடையே ஓரளவு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது.
படம் படுதோல்வி: அந்த எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத்தான் கொடுத்திருந்தார் இயக்குநர். கதை, திரைக்கதை என எதிலுமே புதுமையாகவும் இல்லை; ரசிக்கும்படியும் இல்லை என்று ஓபனாகவே அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்திருக்கும் நிலையில் மொத்தமே அப்படம் 4 கோடி ரூபாயைத்தான் வசூலித்திருப்பதாகவும்; இப்படத்தை தயாரித்த விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமிக்கு கடுமையான நஷ்டம் வந்துவிட்டதாகவும் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
ட்ரெண்டாகும் வீடியோ: ஒருபக்கம் ரிவால்வர் ரீட்டா சத்தமே இல்லாமல் போக இன்னொரு பக்கம் கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று திடீரென்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது அப்படத்தின் ப்ரோமொஷனின்போது அவருடன் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக வந்தார். வந்தவர் தனது மொபைலை சற்று மேலே தூக்கி புகைப்படம் எடுக்க முற்பட்டார். உடனே பதறியே கீர்த்தி, தனது மார்பு பகுதியை கை வைத்து மறைத்தபடி கீழே இறக்கி ஃபோட்டோ எடுங்கள் என்று கூற; அவரும் அப்படியே செய்தார். இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள், 'புள்ளைய எப்படி வளர்த்திருக்காங்க பாருங்க' என்று கேப்ஷன் போட்டு சமூக வலைதளங்களில் ஷேர் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











