ஹிந்திக்கு போன பிறகு ஆளே மாறிட்டாங்க.. இப்படியா செய்வது கீர்த்தி சுரேஷ்?.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக சைரன் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.ஹிந்தியிலும் பேபி ஜான் என்ற படத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ்.

ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையு ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல தமிழ் இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, ரஜினிஉடன் அண்ணாத்த என பல படங்களில் நடித்தார்.

Keerthy Suresh Raghuthatha

சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.

தேசிய விருது: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்

மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: இதற்கிடையே தமிழ் பக்கம் பெரிதாக தலைகாட்டாமல் இருந்த அவருக்கு மாமன்னன் திரைப்படம் மீண்டும் ஒரு ஹிட்டை கொடுத்தது. லீலாவதி என்ற கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு சைரன் படத்தில் நடித்த அவருக்கு தோல்வியே கிடைத்தது. அடுத்ததாக ரகுதாத்தா படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருப்பதால் எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கிறது.

சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி?: தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடிக்கிறார் கீர்த்தி. தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் சமந்தா ரோல் செய்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தென்னிந்திய மொழிகளில் நடிப்பதற்கு மூன்று கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கு கீர்த்தி; பேபி ஜான் படத்தில் நடிக்க நான்கு முதல் ஐந்து கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X