அண்ணாத்த படத்தால் வந்த யோகம்.. திடீரென சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென தனது அடுத்த படத்திற்கு பல கோடிகள் சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட் வாய்ப்புக்காக உடல் எடையை அநியாயத்துக்கு குறைத்து பார்க்கவே பரிதாபமாக மாறிய கீர்த்தி சுரேஷுக்கு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கடைசியில் கிடைக்காமலே போய்விட்டது.

ஆனாலும், மறுபடியும் பழையபடி தனது மார்க்கெட்டை பிடிக்க கடுமையாக உழைத்த கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது பல பெரிய படங்கள் உள்ள நிலையில், தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

படங்கள் ஃபிளாப்

படங்கள் ஃபிளாப்

நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் வேற லெவலுக்கு செல்லப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில், இந்தி படமான மைதான் வாய்ப்பு பறிபோனதால் அவர் மிகவும் அப்செட் ஆனார். தமிழில் அவர் நடித்து வெளியான பெண்குயின் படம் படு தோல்வியை சந்தித்தது. தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான மிஸ் இந்தியா படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அண்ணாத்த தங்கச்சி

அண்ணாத்த தங்கச்சி

பெரிய படத்தில் மீண்டும் நடித்து பழைய மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என நினைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் தங்கச்சி ரோல் என்றாலும் பரவாயில்லை என ஒப்புக் கொண்டு நடித்துள்ளார். அண்ணாத்த படத்தில் நடித்த யோகம் தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

மகேஷ் பாபு ஜோடி

மகேஷ் பாபு ஜோடி

தமிழில் தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். வரும் பொங்கலுக்கு சர்காரு வாரி பாட்டா திரையரங்குகளில் வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷ் சிபாரிசு

கீர்த்தி சுரேஷ் சிபாரிசு

தமிழில் கலக்கிக் கொண்டிருந்த தளபதி விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி உடன் இணைந்து படம் பண்ண காரணமே கீர்த்தி சுரேஷ் தான் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. கீர்த்தி சுரேஷ் செய்த சிபாரிசு காரணமாகத்தான் தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு விஜய் ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. தளபதி 66 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

நானி படம்

நானி படம்

மகேஷ் பாபு படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நானி நடிக்கும் தசரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்திற்காகத் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளத்தை கேட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

சம்பளம் எகிறிடுச்சு

சம்பளம் எகிறிடுச்சு

இதுவரை 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் நானியின் தசரா படத்தில் நடிக்க 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாகவும் அதற்கு தயாரிப்பு தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெல்லா இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ஏணி வைத்தாலும் எட்டாது

ஏணி வைத்தாலும் எட்டாது

என்னதான் தேசிய விருது வென்ற நடிகையாக இருந்தாலும் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளத்தில் 10ல் ஒரு பங்கை கூட நாயகிகள் பெற மாட்டார்கள் என்றே தெரிகிறது. ஹீரோக்களின் சம்பளம் 100 கோடியை தாண்டி செல்லும் நிலையில், ஹீரோயின்களின் சம்பளம் 2 முதல் 5 கோடி வரையே இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X