தினமும் 10இட்லி,10 தோசை சாப்பிடுவேன்.. 10 மாதத்தில் 10 கிலோ குறைத்தேன்.. கீர்த்தி சுரேஷின் டிப்ஸ்!

சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் கீர்த்தி சுரேஷ், தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனமில் நீங்காத ஒரு இடத்தைபிடித்த நடிகையாக இருக்கிறார். இவர் சினிமாவிற்கு வந்த புதில் கொழுக்கு மொழுக் என்று இருந்தார். அதன் பின் உடல் உடையை குறைத்து இப்போது ஒல்லி பெல்லி இடையழகியாக மாறி இருக்கிறார். இவர் அளித்த பேட்டியில் தனது உடல் எடை குறைத்தது குறித்து பேசி இருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக பைலட்ஸ் என்கிற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக வலம் வந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான 'இது என்ன மாயம்' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படம் ஓரளவுக்கு பேசப்படும் திரைப்படமாக அமைந்தது. அந்த படத்திற்கு பின், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ் நடித்த இரண்டாவது திரைப்படமே அவரை புகழின் புச்சிக்கு கொண்டு சென்றது.

Keerthy Suresh weight loss
Photo Credit:

நடிகை கீர்த்தி சுரேஷ்: அதன் பின் தொடரி, ரொமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார், சண்டக்கோழி சீமராஜா என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ். சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநதி படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருதை பெற்றார். தமிழ், மலையாளத்தில் கலக்கி வந்த கீர்த்தி சுரேஷ், தெறி இந்தி ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் தனது தடத்தை பதித்தார். தற்போது கீர்த்தி சுரேஷ், 'ரிவால்வர் ரீட்டா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் 28ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷ் புலம்பல்: 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விஷயத்தை பேசி இருக்கும் கீர்த்தி சுரேஷ், உடல் எடையை குறைத்தது குறித்து தெளிப்படையாக பேசி உள்ளார். நான் குண்டாக இருந்தபோது அழகாக இருந்தேன் என்று பலர் சொல்கிறார்கள். அந்த நேரத்தில் எனக்கு 10 தோசை,10 இட்லி சாப்பிடுவது போல் இருந்தது. அப்போது எனக்கு உணவு கட்டுப்பாடு இல்லை, ஆனால், நான் உடற்பயிற்சி செய்தேன். ஆனால், அதன் பிறகு, உணவில் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டதால், 10, 12 மாதங்களில் சுமார் 10 கிலோ எடையைக் குறைத்தேன். நடிப்பதைத் தவிர, ஆரோக்கியத்தைப் பராமரிப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். 4 ஆண்டுகளுக்கு முன்புதான் நான் சருமப் பராமரிப்பைத் தொடங்கினேன். மகாநதி திரைப்படத்தின் பிறகுதான் எனக்கு அந்த எண்ணமே வந்தது.

இதனால்,அதிக புரத சத்து உள்ள முட்டையின் வெள்ளைகள், பனீர்,சோயா மற்றும் பருப்பு வகைகள் கொஞ்சம் தவிர்த்தேன். யோகா எனக்கு அமைதியையும், உடல் உறுதியையும் கொடுத்தது. அதை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். இதுவே என்னை ஆரோக்கியமாகவும், உடல் எடை குறைக்க உதவியாக இருந்தது என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X