ஒரு முறையாவது மீட் பண்ணுங்க சமந்தா...கீர்த்தி சுரேஷ் வைத்த க்யூட் கோரிக்கை
சென்னை : இவரை ஒரு முறையாவது மீட் பண்ணுங்க சமந்தா என க்யூட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கீர்த்தி சுரேஷ் யாருக்காக இப்படி கோரிக்கை வைத்துள்ளார் என ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
அண்ணாத்த, குட் லக் சகி என வரிசையாக படங்களில் நடித்து முடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக சர்காரு வாரி பாட்ட, சிரஞ்ஜீவிக்கு தங்கையாக போலா ஷங்கர், தமிழில் செல்வராகவனுடன் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பிஸியான சமந்தா
இதே போல் சமந்தாவும் காத்து வாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம், யசோதா, ஹாலிவுட்டில் பெயரிடப்படாத படம் என ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். புஷ்பா படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் படத்திலும் சமந்தா அயிட்டம் சாங் ஒன்றிற்கு ஆட ஒப்பந்தமாகி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

சமந்தா மாதிரி ஆகணும்
கீர்த்தி சுரேஷ் நடித்துக் கொண்டிருக்கும் செட்டில் அழகான, க்யூட்டான சிறுமி ஒருவரை பார்த்துள்ளார். அவரை கூப்பிட்டு பேசிய கீர்த்தி சுரேஷ், உனக்கு யாரை பிடிக்கும். வளர்ந்ததும் யாரை போல் ஆக போகிறாய் என கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமி, தனக்கு சமந்தா என்றால் மிகவும் பிடிக்கும். வளர்ந்த பிறகு சமந்தாவை போல் ஆக வேண்டும் என கூறி உள்ளார். இதை கேட்டு ஆச்சரியப்பட்ட கீர்த்தி சுரேஷ், அந்த சிறுமி பேசுவதை அப்படியே தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுள்ளார்.

யாருப்பா இந்த க்யூட்டி
அந்த வீடியோவுடன், சமந்தா, இவர் உங்களின் அதிதீவிர ரசிகை. இவரை ஒரு முறையாவது மீட் பண்ணுங்க சாம் என கேட்டுக் கொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த வீடியோவை பார்த்து விட்டு பதில் பதிவிட்டுள்ள சமந்தா, யார் இந்த க்யூட்டி என கேட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட அந்த க்யூட் சிறுமியின் வீடியோ, அதற்கு சமந்தா போட்டுள்ள பதில் ஆகியன தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

அட குட்டி சமந்தாவா
இந்த வீடியோவை பார்த்து விட்டு ரசிகர்களும் யாருப்பா இந்த குட்டி சமந்தா...சமந்தா 2 ஆ என கேட்டு வருகின்றனர். இந்த ஒரு வீடியோவால் குட்டி சமந்தா சோஷியல் மீடியாவில் பயங்கர பிரபலமாகி விட்டார். இவர் யார் என்பதை தெரிந்து கொள்ள சமந்தா, கீர்த்தி சுரேஷ் இருவரின் ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











