அந்த அட்டர் ஃப்ளாப் படத்துக்காக மெகா ஹிட் படத்தை மிஸ் செய்த கீர்த்தி சுரேஷ்?.. என்ன கொடுமை இது?
சென்னை: கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் கோவாவில் நடைபெற்றது. இதில் விஜய், அட்லீ, திரிஷா, ப்ரீத்தி, டிடி,கல்யாணி ப்ரியதர்ஷன் என நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. திருமணத்துக்கு பிறகும் கீர்த்தி நடிப்பார் என்றே கருதப்படுகிறது. இந்தச் சூழலில் படுதோல்வியடைந்த படத்துக்காக மெகா ஹிட்டான ஒரு படத்தை கீர்த்தி மிஸ் செய்ததாக கூறப்படுகிறது.
தமிழில் நடிகையாக இருந்த மேனகாவுக்கு பிறந்தவர் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் அதிரிபுதிரி ஹிட்டடித்ததை தொடர்ந்து கீர்த்திக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி முன்னணி நடிகை என்ற நிலைக்கு நகர்ந்தார்.
தேசிய விருது வென்ற நடிகை: அவர் எவ்வளவுதான் சிறந்த முறையில் நடித்தாலும் அவரை ட்ரோல் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. சூழல் இப்படி இருக்க தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார் அவர். இருந்தாலும் அவர் எதிர்பார்த்தபடி அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் சில வருடங்களுக்கு கிடைக்கவில்லை. பிறகு தமிழில் மாமன்னன், சைரன் என வரிசையாக நடித்தார்.
கீர்த்தி சுரேஷுக்குள் காதல்: தமிழ், தெலுங்கில் மட்டும் நடித்துவந்த அவர் ஹிந்தியிலும் காலடி எடுத்துவைத்தார். அந்தவகையில் அட்லீ தயாரிப்பில் உருவான தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையே அவர் கடந்த 15 வருடங்களாக ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்டனியை அறிமுகம் செய்துவைத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திருமணம் செய்துகொண்ட ஜோடி: இருவரது காதலும் கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. அவர்களின் திருமணம் கோவாவில் ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் பிரமாண்டமாக நடைபெற்றது. அவர்களது திருமணத்தில் விஜய், திரிஷா, அட்லீ, ப்ரீத்தி, கல்யாணி ப்ரியதர்ஷன் என பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பிறகு பேபி ஜான் ப்ரோமோஷனில் தீவிரமாக கலந்துகொண்டார் கீர்த்தி.
பேபி ஜான் படுதோல்வி: ஆனால் திருமணத்துக்கு பிறகு தீவிரமாக பேபி ஜான் ப்ரோமோஷனில் கீர்த்தி கலந்துகொண்டிருந்தாலும் படம் படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக படத்தை தயாரித்த அட்லீக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாகவும்; முதல் ஹிந்தி படமே இப்படி படுதோல்வியடைந்துவிட்டதே கீர்த்தி அப்செட் ஆனதாகவும் கூறப்பட்டது. இருந்தாலும் எப்படியாவது இன்னொரு ஹிந்தி படத்தில் நடித்து அங்கும் தனக்கான மார்க்கெட்டை உருவாக்க நினைத்திருக்கிறாராம் கீர்த்தி.
மிஸ் செய்த கீர்த்தி சுரேஷ்: இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ஹிந்தியில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் சாவா. மிகப்பெரிய ஹிட்டடித்த அந்தப் படம் உலகளவில் 700 கோடி ரூபாய்வரை வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பியது. முதலில் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம்தான் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்; ஆனால் பேபி ஜான் படத்தில் நடித்ததால் அதில் நடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ, அட்டர் ஃப்ளாப்பான படத்துக்காக மெகா ஹிட்டை தவறவிட்ட கீர்த்தி ஒழுங்காக தேதிகளை அட்ஜஸ்ட் செய்து சாவாவில் நடித்திருக்கலாம் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











