திருமணத்துக்கு பின் ஒரு மார்க்கமான கீர்த்தி சுரேஷ்.. என்ன ட்ரெஸ் மேடம் அது?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை கடந்த 12ஆம் தேதி கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூனுக்கு செல்வார் என்று பார்த்தால் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார் அவர். இந்தச் சூழலில் அவர் வித்தியாசமாக ஆடை அணிந்து வந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியிருக்கிறது.
தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவுக்கு பிறந்த கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் காரணமாக கீர்த்தி சுரேஷுக்கும் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் அவர்.

தெலுங்கிலும் பிஸி: தமிழ், மலையாளத்தில் மட்டும் நடித்துவந்த அவர் அடுத்ததாக தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியை பெற்று கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதினையும் வாங்கி தந்தது. அதனையடுத்து அவருக்கு சின்ன சறுக்கல் ஏற்பட தமிழில் மாமன்னன் திரைப்படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க மீண்டும் தமிழில் பிஸியானார் அவர். அந்தவகையில் சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; கடைசியாக ரகுதாத்தா படத்தில் நடித்தார்.
ஹிந்தியிலும் கீர்த்தி: இதற்கிடையே தமிழில் வெளியாகி மெகா ஹிட்டான தெறி படம் ஹிந்தியில் ரீமேக்காகியிருக்கிறது. வருண் தவான் ஹீரோவாக நடிக்க கீர்த்தி சுரேஷும் அதில் நடிக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி பயங்கர ட்ரெண்டானது. மேலும் அந்தப் பாடலில் கீர்த்தி தனது உச்சக்கட்ட கிளாமரை காண்பித்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ஹிந்திக்கு சென்ற பிறகு கீர்த்தி சுரேஷ் ஆளே மாறிவிட்டாரே ப்பா என்று ஆச்சரியத்துடன் கூறிவருகிறார்கள்.
திருமணம்: சூழல் இப்படி இருக்க கீர்த்தி சுரேஷுக்கு கடந்த 12ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அவர் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் வைத்து ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்துகொண்டார். அதில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். ஆண்டனியை பொறுத்தவரை கொச்சி, சென்னை, துபாய் உள்ளிட்ட பல இடங்களில் வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரோமோஷனில் பிஸி: திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூனுக்கு கணவரோடு கீர்த்தி பறந்துவிடுவார் என்று பலரும் நினைத்த சூழலில் பேபி ஜான் படத்துக்கு பறந்து பறந்து ப்ரோமோஷன் செய்துவருகிறார். அதிலும் கழுத்தில் தாலியுடன் வித்தியாசமான உடைகளில் ஜொலிக்கிறார் அவர். அந்தவகையில் அவர் இன்று விமான நிலையத்துக்கு வந்தபோது அணிந்திருந்த உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதாவது இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளும் அந்த ஆடையில் இருந்தது. அதுமட்டுமின்றி கைகளுக்குள்ள பகுதி தனியாக தொங்கிக்கொண்டிருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்களோ தேசிய ஒருமைப்பாடு சரி, அது என்ன இரண்டு கைகளும் தொங்கிக்கொண்டிருக்கின்றன என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











