சொகுசு ஹோட்டலில் தூங்கி எழுந்தபடி போஸ் கொடுத்த ஓவியா.. உடனடியாக லைக் போட்ட கீர்த்தி சுரேஷ்!

சென்னை: சொகுசு ஹோட்டலில் குவாரன்டைனில் நடிகை ஓவியா உள்ள நிலையில், தூங்கி எழுந்தபடி பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த உடனே நடிகை கீர்த்தி சுரேஷ் லைக் போட்டிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை ஓவியா ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார்.

நடிகை ஓவியா, வனிதா விஜயகுமார், சினேகன், ஜூலி என பிக் பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்க உள்ள அனைத்து போட்டியாளர்களும் குவாரன்டைனில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் ஓவியா இஸ் பேக்

பிக் பாஸ் ஓவியா இஸ் பேக்

களவாணி படத்தின் மூலம் ரசிகர்களின் மனங்களை களவு செய்த நடிகை ஓவியா பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வேற லெவல் பிரபலம் அடைந்தார். ஓவியாவுக்கென ரசிகர்கள் ஆர்மியை அமைத்து அவரை தலைவி என தலையில் வைத்துக் கொண்டாடினர். இந்நிலையில், மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

சொகுசு ஹோட்டலில்

சொகுசு ஹோட்டலில்

பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்வதற்காக நடிகை ஓவியா சொகுசு ஹோட்டல் ஒன்றில் குவாரன்டைனில் வைக்கப்பட்டுள்ளார். நடிகை ஓவியாவை போலவே மற்ற போட்டியாளர்களும் தனித்தனி அறைகளில் அதே ஹோட்டலில் தங்கி வருகின்றனர். வரும் சனிக்கிழமை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் துவக்க விழா ஷூட்டிங் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தூங்கி எழுந்தபடி

தூங்கி எழுந்தபடி

இந்நிலையில், அந்த ஹோட்டல் அறையில் தூங்கி எழுந்ததும் போட்டோ எடுத்து நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. ஓவியாவின் ஆர்மியினர் ஹார்ட்டீன்களை போட்டு பிக் பாஸ் அல்டிமேட்டில் ஓவியாவின் ஆட்சியை காண காத்திருக்கின்றனர்.

லைக் போட்ட கீர்த்தி சுரேஷ்

லைக் போட்ட கீர்த்தி சுரேஷ்

நடிகை ஓவியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 1.8 லட்சம் ரசிகர்கள் மட்டுமே உள்ளனர். சீரியல் நடிகைகள், குழந்தை நட்சத்திரங்களுக்கே 2 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ஓவியாவை ஃபாலோ செய்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஓவியா இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்டதும் உடனடியாக லைக் போட்டிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

நாட்டு நாட்டு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் போட்ட செம ஆட்டம்...அதுவும் யாருடன் தெரியுமா ?
மலையாள நடிகைகள்

மலையாள நடிகைகள்

நடிகை ஓவியா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் மலையாள நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஓவியாவின் இந்த போஸ்ட்டுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் லைக் போட்டுள்ளார் என தெரிகிறது. கீர்த்தி சுரேஷின் குட் லக் சகி திரைப்படம் நாளை (ஜனவரி 28) வெளியாவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X