அம்மா நடித்த கேரக்டரில் நடிக்கிறாராமே? நெற்றிக்கண் ரீமேக்கில் தனுஷுடன் இணைகிறாரா கீர்த்தி சுரேஷ்?
சென்னை: ரஜினியின் நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழில், இது என்ன மாயம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
முன்னாள் ஹீரோயின் சாவித்ரியின் வாழ்க்கை கதையான, நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார். இப்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தி படம்
இதற்கிடையே, இந்தியில் மைதான் என்ற படத்திலும் அவர் ஒப்பந்தம் ஆனார். இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கைக் கதை இது. இதில், அஜய் தேவகன், ரஹீமாக நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அஜய்தேவ்கன் மனைவியாக, கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருந்தார். இதன் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார்.

பிரியாமணி
இதில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு பகுதியை பேசும் சினிமா. உலகம் அறிந்து கொள்ள வேண்டிய படம். நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை இது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் விலகினார். அவருக்கு பதிலாக பிரியாமணி நடித்துவருகிறார்.

நெற்றிக்கண் ரீமேக்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வனில் இருந்தும் அவர் ஏற்கனவே விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நெற்றிக்கண் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான படம் நெற்றிக்கண்.
Recommended Video

மேனகா நடித்த கேரக்டர்
எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்த இந்தப் படத்தில் சரிதா, லட்சுமி, கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். இந்தப் படம் இப்போது ரீமேக் செய்யப்பட இருக்கிறது. ரஜினி நடித்த கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். மேனகா நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று கூறப்படுகிறது. கர்ணன் படத்துக்கு பிறகு இதில் தனுஷ் நடிப்பார் என்று தெரிகிறது. கீர்த்தி சுரேஷும் தனுஷும் ஏற்கனவே தொடரி படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்


Click it and Unblock the Notifications











