கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!

மும்பை: அட்லீ தயாரிப்பில் பாலிவுட் நடிகர் வருண் தவான் உடன் ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் எனும் இந்தி படத்தில் நடித்து வருகிறார். நேற்று அந்த படக்குழுவினருடன் நடைபெற்ற பார்ட்டி நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்து கலந்து கொண்டது ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்.

Keerthy Suresh looks so weird at Varun Dhawan birthday party pics and videos trending

நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக அஜய் தேவன் நடிப்பில் உருவான மைதான் படத்தில் நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரது உடல் எடை மோசமாக குறைந்த நிலையில், அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் அந்த படம் இந்த ஆண்டு தான் வெளியானது. பெரும் பொருட்செலவில் வெளியான அந்த படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்: மைதான் படம் மிஸ் ஆனாலும் பாலிவுட்டில் நடிக்கும் தனது கனவை தொடர்ந்து துரத்திக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷுக்கு அட்லீ தயாரிப்பில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேபி ஜான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தமிழில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Keerthy Suresh looks so weird at Varun Dhawan birthday party pics and videos trending

வருண் தவான் பர்த்டே பார்ட்டி: பேபி ஜான் படத்தின் ஹீரோ வருண் தவான் நேற்று தனது 37-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நிலையில், பேபி ஜான் படக்குழுவினருடன் இரவு நேரத்தில் நடைபெற்ற பாட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வருண் தவானை கட்டியணைத்து: ஓவர் மேக்கப் மற்றும் கவர்ச்சி உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த பார்ட்டியில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு பங்கேற்றதை பார்த்த ரசிகர்கள் தற்போது ஏகப்பட்ட ட்ரோல்களை பதிவிட்டு வருகின்றனர். பேபி ஜான் படத்தின் ஹீரோ வருண் தவானை கட்டியணைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ் கேக் துண்டையும் ஊட்டி விடும் காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.

அட்லீயை அணைத்து: மேலும், பேபி ஜான் படத்தின் தயாரிப்பாளர் அட்லீயையும் கட்டிப்பிடித்து தனது நன்றியை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடித்து வரும் வாமிகா கபியும் கவர்ச்சி உடையில் பர்த்டே பார்ட்டியில் பங்கேற்றுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்: அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த வரும் நிலையில் தொடர்ந்து அவருடன் நெருங்கி பழகி வருகிறார். அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்க உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பாரா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Keerthy Suresh looks so weird at Varun Dhawan birthday party pics and videos trending

ரகு தாத்தா என்னாச்சு?: இந்தி எதிர்ப்பை மையப்படுத்தி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படம் என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ஆண்டு ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த சைரன் 108 படம் அதே ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு விட்டதாகவும் ட்ரோல் செய்து வருகின்றனர். தற்போது இந்தி படத்தில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என்றும் சமீபத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X