என்னது 1000 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா.. கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி செம சீக்ரெட் சொன்ன பிரபலம்
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது நீண்ட கால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை இன்று கோவாவில் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்தில் விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். ஆண்டனி கிறிஸ்தவராக இருந்தாலும் ஹிந்து முறைப்படி தாலி கட்டினார். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இந்தச் சூழலில் அவர்களது திருமணம் பற்றி பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
ரஜினியுடன் நெற்றிக்கண் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மேனகா. இவரின் மகள் கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமான அவருக்கு ரஜினிமுருகன் படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்துக்கு பிறகு விஜய், விக்ரம், ரஜினிகாந்த், சூர்யா என தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற இடத்துக்கு நகர்ந்தார். அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மகாநடி படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

பாலிவுட்டில் என்ட்ரி: தமிழில் அவருக்கு இடையில் சறுக்கல் ஏற்பட்டது. அதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து தமிழில் நடித்துவரும் அவர்; இப்போது பாலிவுட்டுக்கும் சென்றிருக்கிறார். அதன்படி வருண் தவானுக்கு ஜோடியாக பேபி ஜான் படத்தில் நடித்திருக்கிறார் அவர். இந்தப் படம் தெறி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ட்ரெய்லரும், சிங்கிளும் சமீபத்தில்தான் வெளியாகின. முதல் சிங்கிளில் கீர்த்தியின் கிளாமர் கொஞ்சம் ஓவராகவே இருந்தது.
காதலில் விழுந்த கீர்த்தி சுரேஷ்: இதற்கிடையே அவரது திருமணம் பற்றிய வதந்திகள் கடந்த சில காலமாகவே பரவிவந்தது. சூழல் இப்படி இருக்க அவர் சில வாரங்களுக்கு முன்பு தனது காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை அறிமுகம் செய்துவைத்தார். இரண்டு பேருமே கடந்த பதினைந்து வருடங்களாக காதலித்துவருகிறார்கள். ஆண்டனிக்கு கொச்சி, சென்னை, துபாய் என்று பல இடங்களில் தொழில் இருப்பதாகவும்; அவர் வெளியில் தெரியாத மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது.
திருமணம்: இரண்டு பேருக்கும் டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் திருமணம் நடக்கும் என்று குடும்பத்தினர் அறிவித்தார்கள். அதன்படி இன்று கோவாவில் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இதில் விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ஆண்டனி கிறிஸ்தவராக இ ருந்தாலும் ஹிந்து முறைப்படி கீர்த்தியின் கழுத்தில் தாலி கட்டினார். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியிருக்கின்றன.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "கீர்த்தி சுரேஷும் ஆண்டனியும் 15 வருடங்களாக காதலித்துவருகிறார்களாம். தான் இன்னாரைத்தான் காதலிக்கிறேன் என்று சில மாதங்களுக்கு முன்பு கீர்த்தி சொல்லியிருந்தால் நிறைய கிசுகிசுக்கள் வந்திருக்காது. இந்தத் திருமணத்தை அவர்கள் விற்காமல் இருந்தால் நல்லதுதான்.
1000 கோடி ரூபாய்: கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டிலின் திருமணம் கோவாவில் பிரமாண்டம்தான். சினிமாவில் ஃபேமஸான ஒருவரிடம் கீர்த்தி சுரேஷுக்கு எவ்வளவு சொத்து இருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவரோ 500 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய்வரை இருக்கும் என்று சொன்னார். அது எனக்கு ஷாக்கை கொடுத்தது. ஆனால் அதுதான் உண்மை என்று சொன்னார். குறைந்தபட்சம் சில நூறு கோடி ரூபாய் செலவில்தான் அவர்களது திருமணம் நடக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











