ஓய் செல்ஃபி.. செல்ல நாய்க்குட்டியுடன் ஜிம்மில்.. வைரலாகும் கீர்த்தி சுரேஷின் க்யூட் போட்டோ!

சென்னை: தனது செல்ல நாய்க்குட்டி நைக்குடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள மிரர் செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.

Recommended Video

Top Celebrities Quarantine | Lock Down Diaries

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்த கொரோனா லாக் டவுனால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி இருக்க வேண்டிய இரண்டு பெரிய படங்களின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

அரபிக் கடலின் சிங்கம்

அரபிக் கடலின் சிங்கம்

கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் லீடு ரோலில் நடித்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மோகன் லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்தில் நடித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் வெளியாக வேண்டிய அந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகி உள்ளது.

மிஸ் இந்தியா

மிஸ் இந்தியா

நடிகையர் திலகம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகை கீர்த்தி சுரேஷுக்கு லீடு ரோலில் நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. நரேந்திர நாத் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி உள்ள மிஸ் இந்தியா படமும் கடந்த மாதம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த படத்தின் ரிலீசும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திருமண வதந்தி

திருமண வதந்தி

இந்த லாக் டவுனை சாக்காக வைத்து பல பொய்யான தகவல்களும், வதந்திகளும் வைரலாகி வருகின்றன. அதில், முக்கியமான ஒன்றாக நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், கேரளாவை சேர்ந்த அரசியல் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப் படவுள்ளது என்ற வதந்தி தான். ஆனால், அதனை கீர்த்தி சுரேஷ் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

காத்தாடி

காத்தாடி

ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது வீட்டின் மொட்டை மாடியில் காத்தாடி விட்டு மகிழும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா ஸ்டோரிஸில் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

கொஞ்சி விளையாடுறார்

கொஞ்சி விளையாடுறார்

மேலும், தனது செல்ல நாய்க்குட்டியான நைக்குடன் நடிகை கீர்த்தி சுரேஷ், இந்த குவாரண்டின் காலத்தை ரொம்ப ஜாலியாக என்ஜாய் பண்ணி வருகிறார். நைக்குடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட, தனது இன்ஸ்டா பக்கத்தில் நைக்குக்கு தனி பக்கமே ஒதுக்கி வைத்திருக்கிறார்.

மிரர் செல்ஃபி

மிரர் செல்ஃபி

இந்நிலையில், தனது வீட்டில் உள்ள ஜிம் ரூமில் வொர்க்கவுட் செய்யும் போது செல்ல நாய்க்குட்டி நைக்குடன் மிரர் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். கீர்த்தி சுரேஷின் இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவுக்கு இதுவரை 8 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

6 படங்கள்

6 படங்கள்

சர்கார் படத்திற்கு பிறகு தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் பெண்குயின் மற்றும் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படங்களும், டோலிவுட்டில் மிஸ் இந்தியா, குட் லக் சகி, ரங் தே உள்ளிட்ட படங்களும், மலையாளத்தில் மரைக்காயர் படமும் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X