இதுக்கு மேல பூனைக்குட்டியை ஒளிக்க முடியாது.. திருமண தேதி நெருங்கிய நிலையில், கீர்த்தி சுரேஷ் ஓபன்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வரும் தகவல் சமீபத்தில் கசிந்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 32 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் வரும் டிசம்பர் மாதம் கோவாவில் கோலாகலமாக திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு மேலும், பூனைக் குட்டியை ஒளித்து வைக்க முடியாது என நினைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தனது காதலருடன் கைகோர்த்து இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு தனது 15 ஆண்டுகால ரகசிய காதல் கதையை கூறியுள்ளார்.

keerthy suresh marriage baby john

கீர்த்தி சுரேஷின் காதலர் குறித்தும் அவரது திருமண தேதி குறித்தும் தகவல்கள் ஏற்கனவே கசிந்துவிட்ட நிலையில், அக்கா நீங்க ரொம்ப லேட்டு என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் முதல் விஜய் வரை கிசுகிசு: "உன் மேல ஒரு கண்ணு" என சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷை பார்த்ததுமே ரசிகர்கள் இந்த ஜோடி சூப்பராக இருக்கே என நினைத்தனர். தொடர்ந்து ரெமோ, சீமராஜா என தொடர்ந்து நடித்த நிலையில், இருவரையும் சேர்த்து வைத்து எல்லாம் பேச ஆரம்பித்தனர். ஆனால், சிவகார்த்திகேயன் ஏற்கனவே திருமணமானவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதன் பின்னர் நடிகர் விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் படங்களில் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வயலின் எல்லாம் வாசித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், விஜய்யின் நண்பரான சஞ்சீவ் வீட்டின் அருகே கீர்த்தி சுரேஷ் வசித்ததும் ஏகப்பட்ட கிசுகிசுக்களை கிளப்பின. அதற்கு எல்லாம் ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.

15 வருட காதல்: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதலித்து வருவதை எல்லாம் ரசிகர்கள் கண்டு பிடித்தாலும் இன்னமும் மறைமுகமாக அவர்கள் ரகசிய காதலை நடத்தி வருகின்றனர் எனக் கூறுகின்றனர். நாக சைதன்யா - சோபிதா துலிபாலா ரகசிய காதல் அம்பலமான நிலையில், வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடக்கப் போகிறது. சித்தார்த் - அதிதி ராவ் ரகசிய காதல் அம்பலமான நிலையில், திருமணமும் நடைபெற்றது. இந்நிலையில், தனது 15 வருட காதலை படு ரகசியமாக வைத்திருந்த கீர்த்தி சுரேஷ் திருமண தேதி நெருங்கும் தருவாயில் தான் அதனை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

keerthy suresh marriage baby john

திருமணம் எப்போது?: நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது 15 வருட காதலர் ஆண்டனி தட்டில் இருவரும் கோவாவில் வரும் டிசம்பர் 11ம் தேதி கோலாகலமாக திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழில் ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், விஷால், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நயன்தாராவின் திருமணத்தில் பிரபலங்கள் படையெடுத்து வந்ததை போல கீர்த்தி சுரேஷ் திருமணத்திலும் பிரபலங்கள் படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X