ஹோட்டலில் பார்த்தேன்.. அஜித்துடன் அப்படி மட்டும் நடிக்கவே முடியாது.. ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ்
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களை கொடுத்த சூழலில்; அஜித் பற்றி கீர்த்தி சுரேஷ் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. .
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.
தேசிய விருது: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்
ரகுதாத்தா: மாமன்னன் படம் அவருக்கு தமிழில் நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. அதனையடுத்து அவர் நடித்த சைரன் படம் தோல்வியை சந்தித்த சூழலில்; கடைசியாக ரகுதாத்தா படம் வெளியானது. ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றாலும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. இதன் காரணமாக கீர்த்தி கொஞ்சம் அப்செட் என்றே திரையுலகில் பேச்சு எழுந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க அவர் அளித்த சமீபத்திய பேட்டியில் அஜித் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அப்படி மட்டும் நோ: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அஜித்துடன் நடிக்க எனக்கு எக்கச்சக்க விருப்பம். ஆனால் அவருக்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன். நடித்தால் ஜோடியாகத்தான் நடிப்பேன். அண்ணாத்த படத்தின் ஷூட்டின்போது நான் தங்கியிருந்த ஹோட்டலில்தான் அவரை பார்த்தேன். எனது ரூமை க்ராஸ் செய்து சென்றார். நான் அதை கவனித்து உடனே ஓடிப்போய் பேசினேன். நான் அப்படி செய்வதற்கு முன்னரே அவரது உதவியாளரிடம் அவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். எனது அம்மாவுடன் ஷாலினி நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதை பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்"”என்றார்.


Click it and Unblock the Notifications











