கீர்த்தி சுரேஷுக்கு இருக்கும் வினோத பழக்கம்.. கணவர் ரொம்ப பாவம்தான் போல.. என்ன தெரியுமா?

சென்னை: கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு பிறகு நடித்திருக்கும் ரிவால்வர் ரீட்டா படம் தோல்வியை சந்தித்திருக்கிறது. இப்படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்த கீர்த்திக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் செம அடி வாங்கியிருக்கும் இப்படம் மூன்று நாட்களில் வெறும் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவருக்கும் அவரது காதலர் ஆண்டனி தட்டிலுக்கும் கடந்த வருடம் கோவாவில் வைத்து திருமணம் நடந்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக அவர்கள் காதலித்துவந்திருக்கிறார்கள். ஆனால் அதுகுறித்து இம்மியளவுகூட மீடியாவுக்கோ, ரசிகர்களுக்கோ தெரியாமல் பாதுகாத்து வந்ததை பார்த்து அனைவருமே ஆச்சரியம்தான் பட்டார்கள்.

ஆண்டனி தட்டில் என்ன செய்கிறார்?: கீர்த்தி சுரேஷின் கணவர் ஒரு தொழிலதிபர் ஆவார். கேரளா, தமிழ்நாடு, துபாய் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தொழில் செய்துவருவதாக கூறப்படுகிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே கீர்த்தியும் அவரும் காதலித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேரும் வெவ்வேறு மதம் என்பதால் ஆரம்பத்தில் கீர்த்தியின் வீட்டில் அவர்களது காதலுக்கு கீர்த்தி வீட்டில் சம்மதம் கிடைக்க கொஞ்சம் சிக்கல் இருந்தது. ஆனால் எப்படியோ சம்மதத்தை பெற்று திருமணம் செய்துவிட்டார்கள்.

Keerthy Suresh Opens Up About Married Life and her Quirky Habit
Photo Credit:

கீர்த்திக்கு முழு சப்போர்ட்: திருமணத்துக்கு பிறகு நடிகைகள் நடிக்கக்கூடாது என்றுதான் அவர்களது கணவர்கள் பெரும்பாலும் சொல்வார்கள். ஆனால் தொடர்ந்து நடித்துவரும் கீர்த்தி சுரேஷுக்கு ஆண்டனி தட்டில் தன்னுடைய முழு சப்போர்ட்டையும் கொடுத்துவருகிறார். இது ஒருபக்கம் இருக்க; விளம்பர படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் ஆண்டனிக்கு வந்தது. ஆனால் தனது ரூட் வேறு என்பதில் தெளிவாக இருந்து அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

கீர்த்திக்கு இருக்கும் பழக்கம்: இந்நிலையில் தனக்கு இருக்கும் வினோத பழக்கம் குறித்தும்; அதற்கு தன்னுடைய கணவரின் ரியாக்‌ஷன் குறித்தும் பேசியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "விமானத்தில் நானும் எனது கணவரும் பயணம் செய்துகொண்டிருக்கும்போது நான் என்னிடமே பேசிக்கொண்டிருப்பேன். அப்போது அவர் என்னை ஒருமாதிரி பார்த்து யாரிடம் பேசிக்கொண்டு இருக்க என்று கேட்பார். ஒரு சீனில் இப்படி நடிக்கலாமா அப்படி நடிக்கலாமா என்று யோசித்து பேசிக்கொண்டிருப்பேன். அதுமட்டுமின்றி கடந்த மூன்று நான்கு வருடங்களாக ஒரு கதையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதிலும் ஒரு ஆர்வம் இருக்கிறடு" என்றார்.

ரிவால்வர் ரீட்டாவுக்கு அடி: முன்னதாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு ரிவால்வர் ரீட்டா திரைப்படம் வெளியானது. கீர்த்தியுடன் ராதிகா, ஜான் விஜய், சென்ராயன் உள்ளிட்டோர் நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி படம் படுதோல்வியை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X