பப்பியை கட்டிபிடித்து முத்தம் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்.. குவியும் லைக்ஸ்!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் நாய் குட்டியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மகேஷ்பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள சென்ற இவர் விமானத்தில் போகும்போது எக்கச்சக்கமான ட்ராவலிங் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.
நாய்க்குட்டிகளின் மீது மிகவும் பாசம் கொண்ட இவர் இப்பொழுது தான் வளர்க்கும் செல்ல நாயுடன் ரொமான்ஸ் செய்தவாறு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

இந்தியிலும் பல திரைப்படங்களில்
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் மகாநடி திரைப்படத்தின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தேசிய விருது பெற்ற கையோடு இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழ் தெலுங்கு மலையாளத்தை தொடர்ந்து இப்பொழுது இந்தியிலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

துபாய்க்கு படப்பிடிப்புக்காக
அண்ணாத்த படப்பிடிப்பு லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் தொடங்க ஒரே வாரத்தில் கொரானா மீண்டும் படப்பிடிப்பில் பரவியதால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு இன்று வரை தொடங்கப்படவில்லை. இதனால் தெலுங்கில் நடித்து வரும் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் துபாய்க்கு படப்பிடிப்புக்காக பறந்தார்.

அமெரிக்காவில் படப்பிடிப்பு
விஜய் தேவரகொண்டா ரஷ்மிகா மந்தனா கூட்டணியில் வெளியான கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் இதில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அமெரிக்காவில் படப்பிடிப்பை வைக்க திட்டமிட்டிருந்த படக்குழு லாக்டவுன் அச்சத்தால் இப்பொழுது துபாய்க்கு மாற்றியுள்ளது.

வித்தியாசமான கதாபாத்திரத்தில்
இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகும் சாணி காகிதம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய பல்வேறு படப்பிடிப்பு தளம் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

பப்பியுடன் ரொமான்ஸ்
இந்த நிலையில் செல்லப் பிராணிகளுடன் மிகுந்த அன்பு கொண்ட கீர்த்தி சுரேஷ் தான் வளர்க்கும் குட்டி பப்பியுடன் ரொமான்ஸ் செய்தவாறு கட்டிபிடித்தும் முத்தம் கொடுக்க செல்கின்றவாரும் எடுத்த க்யூட்டான புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்க ரசிகர்கள் லைக்குகளை குவித்து தெறிக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











