இந்த வெற்றியை உங்கள் அம்மாவுக்கு கொடுங்கள்.. தயாரிப்பாளருக்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் எமோஷனலாக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.
தேசிய விருது: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்
மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: இதற்கிடையே தமிழ் பக்கம் பெரிதாக தலைகாட்டாமல் இருந்த அவருக்கு மாமன்னன் திரைப்படம் மீண்டும் ஒரு ஹிட்டை கொடுத்தது. லீலாவதி என்ற கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு சைரன் படத்தில் நடித்த அவருக்கு தோல்வியே கிடைத்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா என்ற படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. அதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் ஹிந்தி தொடர்பான வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.
பாலிவுட் என் ட்ரி: மேலும் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்திலும் நடித்துவருகிறார் அவர். அந்தப் படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம் தவிர்த்து ரிவால்வர் ரீட்டா என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் மகாராஜா படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஷுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் பதிவு: அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உங்களை (மகாராஜா தயாரிப்பாளர்) எட்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் நிறுவனத்தின் ஆரம்பத்தையும், 8 வருடங்களுக்கு பின்பு மிகப்பெரிய அளவில் இப்போது வளர்ந்திருப்பதையும் பார்க்கையில் பெருமை கொள்கிறேன். ப்பா.. உங்கள் வளர்ச்சி சூப்பர். எல்லோரையும் விட உங்கள் அம்மா ரொம்ப சந்தோஷப்படுவார். அவர்களுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு இதுதான்" என்று குறிப்பிட்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ரிவால்வர் ரீட்டா படத்தையும் மகாராஜா தயாரிப்பாளர் ஜெகதீஷ்தான் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











