வாழ்க்கையில் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?.. பெரும் இழப்பு.. உச்சக்கட்ட சோகத்தில் கீர்த்தி சுரேஷ்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

Keerthy Suresh Raghuthatha Maamannan


சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.

தேசிய விருது: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்

ரகுதாத்தா: தமிழில் அவர் கடைசியாக மாமன்னன், சைரன் ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்களில் மாமன்னன் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் சைரன் சத்தம் இல்லாமல் சென்றுவிட்டது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சோகத்தில் கீர்த்தி சுரேஷ்: இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சோகமாக பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதாவது அவரது நெருங்கிய தோழி மனீஷா என்பவர் ப்ரெய்ன் ட்யூமர் நோயால் உயிரிழந்துவிட்டார். அவரது இழப்பு குறித்து சமூக வலைதள பக்கத்தில் கீர்த்தி சுரேஷ், “ப்ரெய்ன் ட்யூமர் நோய்க்காக 21 வயதில் டய்க்னைஸ் செய்ய ஆரம்பித்து கடந்த 8 வருடங்களாக அவள் போராட்டம் நடத்தினாள். ஒரு நாள் அவளை மருத்துவமனையில் சந்தித்தேன். என்னால் தாங்கவே முடியவில்லை. உணர்ச்சிகளை வெளிகாட்ட முடியாமல் கட்டுப்படுத்திக்கொண்டு வந்துவிட்டேன்.

சுயநினைவே இல்லை:கடைசியாக அவளை சந்தித்தபோது சுயநினைவு இல்லாமல் இருந்தாள். அதற்கு பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை. எனக்கு தோன்றும் ஒரு கேள்வி என்னவென்றால் ஒரு இளம் பெண்ணுக்கு அவள் தன்னுடைய வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பாகவே, இந்த உலத்தை முழுவதுமாக பார்ப்பதற்கு முன்பாகவே, அவளுடைய விருப்பங்கள், கனவுகள் எதுவுமே நிறைவேறாததற்கு முன்பாகவே எதற்காக இப்படி நடக்க வேண்டும். எனக்கு இப்போதும் விடை தெரியவில்லை. நீ இறந்து ஒருமாதம் ஆகிவிட்டாலும் தினமும் உனது நினைவு வராத நாளே இல்லை”எ ந்று உருக்கத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X